துன்பத்தை எதிர்கொள்கையில் அதை ஜெயிக்க உனக்கு பலம் கொடுக்கப்பட்டுள்ளது !

முகப்பு ›› அற்புதங்கள் ›› துன்பத்தை எதிர்கொள்கையில் அதை ஜெயிக்க உனக்கு பலம் கொடுக்கப்பட்டுள்ளது !

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெற்றிகளால் நிறைந்ததாகவும் அனைத்தும் நமக்கு சாதகமாக செயல்படும் நேரங்களாகவும் இருப்பதில்லை என்ற உண்மையை நான் அறிந்திருப்பதுபோல் நீங்களும் அறிந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், துன்பத்தின் மத்தியிலும் உறுதியாக நிற்க நாம் பலப்படுத்தப்பட்டிருக்கிறோம்!

“நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.” (வேதாகமத்தில் சங்கீதம் 118:17ஐப் பார்க்கவும்)

நீ ஆண்டவருடைய சமாதானம் மற்றும் பரலோகத்திலிருந்து வரும் சந்தோஷத்தோடு உன் வாழ்க்கையைக் கடந்து செல்லப்போகிறாய் என்று நான் நம்புகிறேன். கஷ்டத்தின் நேரத்தில் உனக்குள் இருக்கும் சமாதானம் உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பரவும்…

உன்னால் எப்படி இவ்வாறு சமாதானத்தோடு இருக்க முடிகிறது? உன் சமாதானத்துக்கான ரகசியம் என்ன? என்று ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள். உன்னிடம் இருக்கும் ரகசியங்கள் இவையே:

  • சகலமும் உன் நன்மைக்காகவே நடக்கிறது என்பதைக் குறித்த நிச்சயம். (வேதாகமத்தில் ரோமர் 8:28ஐப் பார்க்கவும்).
  • ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என்ற நிச்சயத்தைப் பெற்றிருத்தல். (உபாகமம் 20:4ஐப் பார்க்கவும்).
  • உன்னை வழிநடத்துகிறதும் பலப்படுத்துகிறதுமான தேவனுடைய வார்த்தை. (சங்கீதம் 119:105ஐப் பார்க்கவும்)
  • உன்னோடும் உனக்குள்ளும் இருக்கிற பரிசுத்த ஆவியின் பிரசன்னம்! (யோவான் 14:17ஐப் பார்க்கவும்)

ஆம், எல்லாச் சூழ்நிலைகளிலும் உன்னதமான தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்த நீ இந்த சத்தியங்களால் பலப்படுத்தப்படுகிறாய்!

இன்றைக்கே என்னோடு கூட சேர்ந்து அறிக்கையிடு… “நான் ராஜாதி ராஜாவின் பிள்ளையாகவும், உன்னதமான தேவனுடைய சுதந்திரவாளியாகவும் இருப்பதால் பாக்கியவானாய் / பாக்கியவதியாய் இருக்கிறேன். சகலத்தையும் சிருஷ்டித்தவரால் என் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. பூமியை அதன் அச்சில் சுழலச் செய்யும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய பாதுகாப்பின் கீழ் நான் இருக்கிறேன்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!