தாழ்மை குணம் இயேசுவின் சிறப்பியல்பை காட்டுகிறது என்பதை நீ எப்போதாகிலும் கவனித்திருக்கிறாயா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
தேவனிடமிருந்து இறங்கி வரும்படி அவர் மனுஷனாக உருவெடுத்தார், மனிதகுலத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கினவராக வந்தார். நிராகரிப்பு, புரிதல் இல்லாமை, சோகம், வலி, கைவிடப்படுதல் மற்றும் துரோகம் ஆகிய இவைகளும் கூட அவருக்குத் தெரியும்.
அவர் சாதாரண மனிதனாக வரவில்லை… மனிதர்களுக்கு சேவை செய்யும் ஊழியக்காரனாகவும், அவர்கள் முன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் அளவிற்கு இருந்தார். இதைத்தான் யோவான் 13:5-ல் பார்க்கிறோம்: “பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.”
பிரபஞ்சத்தின் ராஜா குனிந்து முழங்கால்படியிட்டு தமது சீஷர்களின் பாதங்களைக் கழுவினார் என்பதை நாம் இங்கே பார்க்கிறோம்.
ஒரு வேலைக்காரனைக் காட்டிலும் தம்மைத் தாழ்த்திக்கொண்டு, முழு இருதயத்தோடும் அவர் ஒரு அடிமையைப்போல இருந்தார், அநீதியின் சுமைகளை தம்மீது ஏற்றுக்கொண்டார்: நம் பாவங்களின் பாரமனைத்தையும் சிலுவை மரத்தில் சுமந்து, அவர் மிகவும் வேதனையுடன் கொல்கொதா மலை வரை சென்றார்.
மனிதர்களுக்குள், தூய்மையான மனப்பான்மையை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிந்தவராகிய ஒரு மனிதர், ஆண்டவர் தமக்குக் கொடுத்த எல்லாவற்றிற்கும் நன்றியுள்ளவராக இருந்தார்… அவரை மகத்துவமானவராக அலங்கரிக்கும் இந்தத் தாழ்மையானது, போலியான தாழ்மை எனும் நிழலால் கறைபடாத சரியான தாழ்மையாக இருக்கிறது.
இது நமக்கு எத்தனை அழகான ஒரு உதாரணமாக இருக்கிறது… நமது ஆண்டவர் என்றென்றும் நிலைத்திருக்கும் மிக அழகான குணங்களில் ஒன்றான தாழ்மையுடன் காணப்பட்டார். அதனால்தான், இதே தாழ்மையை உன் இருதயத்தில் தேடி வளர்த்துக்கொள்ளுமாறு நான் உன்னை ஊக்குவிக்கிறேன். அதன் மூலம், ஒவ்வொரு நாளும், நீ அவருடைய சாயலிலும் ரூபத்திலும் மென்மேலும் வளரலாம்!