சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும்

ஒரு நாள் நான் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​மரவேலைக் கருவிகள், உணவு மற்றும் பிற பொருட்களுடன் இருந்த ஒரு கூடாரத்தைக் கண்டேன். காட்டில் ஒரு தச்சன் கடை வைத்தது போல் இருந்தது.

நான் மிகவும் ஆர்வமானேன். அடுத்த நாள், எனது நண்பன் யோசுவாவை அழைத்து, காட்டில் இருக்கும் இந்த நபரைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள என்னுடன் வரும்படி அழைத்தேன். அவர் ஒரு மோசமான நபராக இருக்கலாம் என்று யோசுவா பயந்தான், ஆனால் அவர் அப்படி இருக்கமாட்டார் என்று நான் உறுதியாக நம்பினேன். அவரது வாழ்க்கை உண்மையான இரக்கத்தையும் நன்மையையும் பிரதிபலித்தது!

சில சிரிப்பலைகளுக்குப் பிறகு, இயேசு முடிக்க வேண்டிய பல திட்டங்களில் ஈடுபாட்டுடன் இருந்ததால், நாங்கள் அவருக்கு உதவவேண்டும் என்ற நிபந்தனையோடு எங்களை அவருடன் இருக்க அனுமதித்தார். அந்த அனுபவத்தால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டு, அடுத்த நாள், எங்கள் நண்பர்கள் பலரையும் அழைத்துக்கொண்டு அவருடன் இருக்கச் சென்றோம். அவர் பேசுவதை கேட்பது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது! அவரது பேச்சு இருதயத்திற்கு நேராக செல்லக்கூடியதாய் இருந்தாலும், எங்களைப் போன்ற குழந்தைகளும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பேசினார்.

அவருடைய போதனைகள் என் இருதயத்திலும், என் நண்பர்கள் அனைவரின் இருதயங்களிலும் ஊடுருவியது. சில நாட்களுக்குப் பிறகு, இயேசு அவர் வேலைசெய்து கொண்டிருந்த தனது திட்டத்தை முடித்தார், மேலும் அவர் ஆண்டவர் சொன்னதைச் செய்ய தனது வழியில் செல்ல வேண்டும் என்று அவர் எங்களிடம் கூறினார். இது ஒரு சோகமான செய்திதான், ஆனால் அதே நேரத்தில், அவர் மற்றவர்களையும் தொடப் போகிறார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.

இயேசுவின் புகழ் பெருகி வந்த நேரம், அவரிடம் சென்று அவர் சொல்வதைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றோம். மேலும் அவர் எங்கள் பகுதியில் செய்த சில அற்புதங்களைக் கூட பார்த்தோம். ஆம், நான் இயேசுவை பின்பற்றுபவள்! நான் ஒரு சிறுமி என்று எனக்குத் தெரியும், ஆனாலும் சமீபத்தில் அவர் இவ்வாறு சொல்வதை நான் கேட்டிருக்கிறேன், “…’சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.'” (மத்தேயு 19:14)

ஆம், நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மேசியா இவர்தான் என்று நான் விசுவாசிக்கிறேன். நானும் எனது நண்பர்களும் அவரைக் கண்டுபிடிக்கவும், அவர் எங்கள் இதயத்தைத் தொடவும் அவர் அந்தக் காட்டில் ஒரு திட்டம் வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.

என் பெயர் அபிகாயில், நான் இயேசுவால் தெரிந்துகொள்ளப்பட்டேன்.

குறிப்பு: அன்பரே, இயேசு நம் அனைவருடனும் ஆழமான மற்றும் உயிருள்ள உறவைக் கொண்டிருக்க விரும்புகிறார், மேலும் இந்த உறவு பெரியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு மட்டுமல்ல. உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகள், மருமகள்கள், மருமகன்கள் மற்றும் அண்டை வீட்டாருக்குக்கும் பொருந்தும், குறிப்பாக இந்த நேரத்தில், இயேசுவை அறிமுகப்படுத்துவதற்கான ஞானத்தை உங்களுக்குத் தரும்படி நான் ஜெபிக்கிறேன், இதனால் அவர்கள் சிறு வயதிலிருந்தே, அவர்களை மிகவும் நேசிக்கிக்கும் ஒருவரை சந்திக்க முடியும்.

நீ ஒரு அதிசயமாக விளங்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டாய்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!