சமாதானமே உன் சுதந்திரம்

முகப்பு ›› அற்புதங்கள் ›› சமாதானமே உன் சுதந்திரம்

ஆண்டவர் நீ ஜீவித்திருப்பதை விரும்பினார் மற்றும் அன்பால் உன்னை வடிவமைத்தார். ஏன்? நிச்சயமாகவே, நீ நிரந்தர மன அழுத்தம் மற்றும் கவலையுடனான வாழ்க்கையை வாழ்வதற்காக அல்ல! ஆயினும்கூட, ஒவ்வொரு நாளும் நீ வீட்டை நிர்வகிப்பது, தொழில்முறை சம்மந்தப்பட்ட பொறுப்புகள், நண்பருடன் கருத்து வேறுபாடு, பணப் பற்றாக்குறை மற்றும் உன் சமாதானத்தைத் திருடக்கூடிய… இன்னும் பல்வேறு விஷயங்கள் போன்ற பல்வேறு வகையான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறாய்.

இப்படியிருக்க, ஒவ்வொரு நாளும் உன் தெய்வீக ஆஸ்தியை நீ எவ்வாறு முழுமையாகப் பெற்றுக்கொள்வாய்? ஆண்டவர் உனக்குக் கொடுக்க விரும்பும் இந்த சமாதானத்தை நீ எப்படி அனுபவிப்பாய்?

அவரை நம்புவதன் மூலமாகவும், அவருடைய கரங்களில் உன்னை முழுமையாக விட்டுக்கொடுத்துவிடுவதன் மூலமாகவும் அதை விசுவாசிப்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவே…

  • அவருடைய வார்த்தை உண்மையானது
  • அவர் உன்னைத் தனிப்பட்ட முறையில் நேசிக்கிறார்
  • அவர் உன்னை அக்கறையுடன் கவனித்துக்கொள்கிறார்!

உன் வாழ்க்கையில் ஆண்டவர் இன்னும் முழுமையாகச் செயல்பட காத்திருக்கும் மறைவான இடம் எங்கே? கர்த்தர் இரக்கமுள்ளவராய் இருக்கிறார். அவர் பரிபூரண அன்பின் மனுவுருவானவர். அவர் கதவைத் திறக்க ஒருபோதும் வற்புறுத்த மாட்டார். ஆனால் நீ அவரை அழைத்தால், அவர் உள்ளே வருவார், அவர் உனக்குள் தம்முடைய வாசஸ்தலத்தை உருவாக்குவார்; அவருடைய அன்பும் சமாதானமும் ஒவ்வொரு நாளும் ஒரு நதியைப்போல பாய்ந்து செல்லும்.

என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும்படி உன்னை அழைக்கிறேன்: “ஆண்டவரே, இன்று நான் எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை நீர் அறிவீர். ஆனால் நான் ஒவ்வொரு நாளும் என் சமாதானத்தின் சுதந்திரத்தை நான் கொண்டிருக்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீர் என்பதை நான் அறிவேன், இது எனக்கும் வேண்டும்! நான் உம்மை உள்ளே அழைக்கிறேன்… நான் உம்மை விசுவாசிக்கிறேன். உம்முடைய நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்”.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!