கிறிஸ்துமஸ்… இயேசுவைத் துதிப்பதை நாம் முதன்மையாக்குவோம்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
இன்று, இந்த கிறிஸ்துமஸ் கேரல் பாடலை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், இது தேவனுக்கு நமது துதிகளை செலுத்தும்படி நமக்கு அறிவுறுத்துகிறது. இயேசு பிறந்த நேரத்தில், தேவதூதர்கள் நமக்கு ஒரு உன்னதமான மற்றும் மகத்தான முன்மாதிரியைக் காண்பித்துக் கொடுத்தனர்.
“கேள் ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
அவர் பாவ நாசகர்
சமாதான காரணர்
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்
ஜென்ம செய்தி கூறுங்கள்
வாழ்க சாந்த பிரபுவே
வாழ்க நீதி சூரியனே
மீட்பராக வந்தவர்
ஒளி ஜீவன் தந்தவர்!”
https://youtu.be/cJleVx1lKHM?si=GRlfoLpFf2MbXIuN
நாம் இயேசுவின் நாமத்தை துதியினால் உயர்த்தி, பரிசுத்த ஆவியானவரை செயல்பட அனுமதிக்கும்போது, நமது துதியில் உண்மையான வல்லமை வெளிப்படும். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில், துதிப்பதை நாம் முதன்மையாக நிறுத்துவோம்! இந்த நாளில் எப்பொழுது வேண்டுமானாலும், கர்த்தருடைய சந்நிதியில் உன் பலத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்… அவரைத் துதித்துப் பாடுவதன் மூலம், அவர் எவ்வளவு உண்மையுள்ளவர் என்பதையும், அவர் உன் வாழ்க்கையில் வந்து உன்னை எவ்வளவு மாற்றினார் என்பதையும் நீ மீண்டும் நினைவில்கொள்வாய்.
தூதர்கள் கர்த்தருடைய துதியைப் பாடுகிறார்கள். லூக்கா 2ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருப்பதைப் போலவே, நாமும் அவரைத் துதிப்பதுதான் நமது பாக்கியம்.
ஆனால் தூதர்களை விட மிகப் பெரிய பாக்கியம் நமக்கு இருக்கிறது… நாம் தேவனின் பிள்ளைகள்! தேவன் நமது வாழ்வை மிகவும் நேசிக்கிறார். நாம் அவருடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், அவர் நம்மோடு உறவாட விரும்புவதால், தனிப்பட்ட முறையில் நம்முடைய துதிகளில் அவர் களிகூருகிறார்!
நமது இந்த கிறிஸ்துமஸ் நாட்கள், விடுமுறை உணவுகள், பரிசுகள் மற்றும் பிற கொண்டாட்டங்களால் நிரம்பியிருக்கும் இந்த காலகட்டத்தில், நமது அற்புதமான தேவனைத் துதித்து, ஆராதித்து, அவரைப் பற்றிய சிந்தனையுடன் உன்னுடைய நாளைத் தொடங்கவும் முடிக்கவும் உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன்.
இதுவே அவருடைய அழைப்பு… மற்றும் இதுவே நமது பாக்கியமாகும்!
