ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதை நீ எப்படித் தொடங்குகிறாய்?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஒவ்வொரு நாளும் காலைப் பொழுதை நீ எப்படித் தொடங்குகிறாய்?

நம் அன்றாட நாளை ஆரோக்கியமாகத் தொடங்க நம்மை நாமே ஊக்குவிப்பது என்ற போக்கு இப்போது அதிகமாக இருப்பதை நீ கவனித்திருக்கிறாயா? உதாரணமாக, நாம் ஆரோக்கியமாக இருக்க, அதிகாலையில் எழுந்திருத்தல், தண்ணீர் அருந்துதல், உடற்பயிற்சி செய்தல், குறிப்பிட்ட காலை உணவைச் சாப்பிடுதல், தியானம் செய்தல் அல்லது குறிப்பிட்ட முறையில் பல் துலக்குதல் போன்றவற்றை நாம் கடைப்பிடிக்கிறோம்.

உன் நாளை நன்றாகத் தொடங்குதல் என்பதன் முக்கியத்துவம் ஒரு புதிய கருத்து அல்ல; உண்மையில், இது ஒரு பண்டையகால நடைமுறையும், வேதாகம நாட்களின் பழக்கவழக்கமுமாக இருக்கிறது. ஆண்டவருடன் நேரத்தை செலவிட்டு, ஒவ்வொரு நாளையும் தொடங்க வேண்டும் என்று வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது:

  • “கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.” (சங்கீதம் :5:3)
  • “அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.” (மாற்கு 1:35)

அதனால்தான், ஒவ்வொரு நாள் காலையிலும் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை உனக்கு அனுப்புகிறோம் – உன் நாளை ஆண்டவருடன் ஆரோக்கியமாகத் தொடங்க உனக்கு உதவவே நாங்கள் இதைச் செய்கிறோம். ஒவ்வொரு அதிசயமும் ஒரு செயலை செய்ய உன்னைத் தூண்டும்படி முடிவடைகிறது, ஒரு பாடல், ஜெபம் அல்லது சிந்தனையில் உன் இதயத்தை ஈடுபடுத்தவும், வார்த்தைகளை நடைமுறைப்படுத்தும்படியும், ஆண்டவர் உன்னில் கிரியை செய்வதற்கு நீ இடமளிக்கும்படியும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் உன்னுடன் பேச விரும்புகிறார், உன்னை மாற்ற ஏங்குகிறார், உன் கவனத்தை ஈர்க்க ஆவலாய் இருக்கிறார்.

அனுதினமும் ஆண்டவருடன் உன் நாளைத் தொடங்குவது உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மோசே இவ்வாறு ஜெபிக்கிறார், “நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.” (சங்கீதம் 90:14)

‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலை வாசிப்பது மட்டுமல்லாமல், ஆண்டவரோடு பேசும்படி சிறிது நேரம் மௌனமாகவும் தனிமையிலும் செலவிடுவதே, அந்த நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். குறைந்தது 10 முதல் 15 நிமிடங்கள் வரை முற்றிலும் மௌனமாக இருந்து, ஆண்டவருடைய குரலைக் கேட்க நாடி காத்திரு. அமைதியான சூழல் நிலவும்படி, உன் கைபேசியை அணைத்துவிடு. ஒரு வரியில் ஒரு எளிய ஜெபம்செய். உதாரணமாக, “ஆண்டவரே, இதோ நான் வந்திருக்கிறேன்” என்று சொல்லு. உன் மனதை ஒருமனப்படுத்த முடியாதபோதும் (இது முற்றிலும் இயல்பானது!), இந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் மெதுவாக ஆண்டவர் மீது உன் கவனத்தைத் திருப்பு. கர்த்தருடைய ஜெபத்தை சொல்லி ஜெபத்தை நிறைவுசெய். கர்த்தருடைய ஜெபம் : மத்தேயு 6:9-13

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!