ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு

“குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது. அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு. அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (வேதாகமத்தில் ஆபகூக் 2:3 ஐ வாசிக்கவும்)

நான் வசந்தகாலத்தை நோக்கிக்கொண்டிருக்கிறேன். வசந்த காலம் எனக்கு மிகவும் பிடிக்கும். மரங்கள் இலைகளாலும் வண்ணங்களாலும் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்கின்றன. பறவைகள் குளிர்கால மறைவிடங்களை விட்டு வெளியேறுகின்றன. குளிர் மிகவும் மிதமாக இருக்கிறது. ஆனால் சில சமயங்களில், சீதோஷ்ணம் பருவநிலைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றும்.

ஒருவேளை நீ ஒரு அற்புதத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கலாம், அதன் விளைவாக, ஒரு கனவு மட்டுமே உனக்குத் தோன்றியிருக்கலாம்…

கவலைப்படாதே, சமாதானத்துடன் இரு. ஆண்டவர் உனக்காக சமாதானத்துக்கான திட்டங்களை வைத்திருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் அழகாக செய்கிறார்! (வேதாகமத்தில் பிரசங்கி 3:11 ஐப் பார்க்கவும்)

என் அன்பரே, இன்று, நம்பிக்கையும் பொறுமையும் உடையவராக இருங்கள். ஆண்டவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அவர் சரியான நேரத்தில் கிரியை செய்வார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!