என் வாழ்வின் பாடுகள்

முகப்பு ›› அற்புதங்கள் ›› என் வாழ்வின் பாடுகள்

வாழ்க்கையில் சில நேரங்களில் கசப்பான அனுபவங்களை நாம் சந்திக்க நேரிடலாம். உண்மையில் சொல்லப்போனால், என் வாழ்க்கை பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். சில நேரங்களில், படுக்கையிலேயே கவனித்துக்கொள்ளும் நிலையில் உள்ள எங்கள் மகனை, அவனது இயற்கை உபாதைகளுக்குப் பின்னர், குளிப்பாட்டி சுத்தம் செய்ய வேண்டிய சூழலில்,​ நான் பெருமூச்சுவிட்டு, அவனுக்கு சேவை செய்து, சுத்தப்படுத்துகிறேன்.

நிச்சயமாக, நம்மில் பலர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய கஷ்டங்களுடன் ஒப்பிடும்போது, இது அவ்வளவு கடினமானது அல்ல. சில சமயங்களில் மோசமான விஷயங்கள் நடப்பதற்கான காரணம் என்ன என்பது நமக்குத் தெரியும், ஆனால் பெரும்பாலான நேரங்களில் அதற்கான காரணம் நமக்குப் புரிவதில்லை.

ஏசாயா 43:2ஆம் வசனம் இவ்வாறு கூறுகிறது:
“நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை.”

இங்கே ‘கடந்தால்’ என்று சொல்லப்படவில்லை, மாறாக ‘கடக்கும்போது’ என்று சொல்லப்பட்ட வார்த்தையைக் கவனித்தாயா? நாம் பரலோகத்திற்கு இந்தப் பக்கத்தில் இருக்கும்வரை, வாழ்க்கையில் கசப்பு நேரிடலாம். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று இயேசுதாமே சொல்லியிருக்கிறார். (யோவான் 16:33)

கஷ்டங்களைத் தவிர்க்க முடியாது என்பதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். துன்பம் தற்காலிகமானதுதான், ஆனால் ஆண்டவருடைய ஆசீர்வாதமோ நித்தியமாக நிலைத்திருக்கும்.

வெளிப்படுத்துதல் 21:4ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது:

“அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”

யோபுவின் கற்பனைக்கு எட்டாத வேதனை கூட முடிவுக்கு வந்தது, ஆண்டவர் அவனுடைய வாழ்க்கையின் பிற்பகுதியை முந்தையதை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆசீர்வதித்தார் (யோபு 42:12-16)

எனது கடினமான காலங்களில் எனக்கு ஆறுதல் அளித்த, எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றை நான் உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நீ அதைக் கேட்கும்போது, உன் கண்களை உனது கஷ்டங்களைவிட்டு விலக்கி, இயேசுவின் மீது கவனம் செலுத்தும்படி நான் உனக்காக ஜெபிக்கிறேன்.

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!