உஷ்ஷ்ஷ் 🤫

முகப்பு ›› அற்புதங்கள் ›› உஷ்ஷ்ஷ் 🤫

நீங்கள் ஆண்டவரோடு தினசரி வேத தியான நேரத்தை செலவிடுகிறீர்களா? அதாவது, உங்கள் ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ வார்த்தைகளை வாசிப்பதைத் தவிர, மற்ற நேரங்களில் ஆண்டவரைத் தேடுகிறீர்களா? நிச்சயமாக தேடுகிறீர்கள் 😉. அப்படியானால், அந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் – அதாவது, ஜெபம், வேதம் வாசித்தல், பத்திரிகை வாசித்தல் அல்லது ஆராதனை செய்தல் என அந்த நேரத்தை நீங்கள் எப்படி செலவிடுகிறீர்கள்?

சற்று ஆழமான தியான பயணத்திற்கு உங்களை அழைக்கிறேன்: தனிமை மற்றும் மௌனத்திற்கான பயிற்சிக்கு உங்களை அழைக்கிறேன். இது புதியதோ அல்லது நவநாகரீகமான ஒன்றோ அல்ல; இது வேத அடிப்படையிலான, ஆவிக்குரிய ஒழுக்கமும் இயேசுவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு பயிற்சியுமாகும்:

“அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.” (லூக்கா 5:16)

“அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.” (மாற்கு 1:35)

எழுத்துவடிவில், தனிமை மற்றும் மௌனம் என்பது எளிதானது – அதாவது, எவ்வித அசைவுமின்றி, தனியாக அமர்ந்துகொண்டு, மௌனமாக இருந்து, ஆண்டவர் மீது கவனம் செலுத்துவது எளிது. ஆனால் நடைமுறையில், இது நாம் யோசிப்பதை விட மிகவும் கடினம். சகல விதமான எண்ணங்களாலும், செய்ய வேண்டிய பட்டியல்களாலும், கேள்விகளாலும், நினைவலைகளாலும் நம் மனம் திசைதிருப்பப்படுகிறது.

அது சுத்தமில்லாத நீரால் நிரம்பிய ஒரு ஜாடி போன்றது; நீங்கள் அதை நீண்ட நேரம் அசையாதபடி வைத்தால், இறுதியில், தண்ணீரில் உள்ள அழுக்கு கீழே படிந்து, தெளிவான தண்ணீர் கிடைக்கும்.

இதைப்போலவே, நாம் நீண்ட நேரம் ஆண்டவருடைய பிரசன்னத்தில் அமர்ந்திருக்கும்போது, நம் ஆத்துமா எனும் நீர் தெளிவாகும், அப்போது, ஆண்டவரில் இன்னும் ஆழமாக சமாதானம், தெளிவு மற்றும் இளைப்பாறுதல் ஆகியவற்றை நம்மால் அனுபவிக்க முடியும்.

“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” (சங்கீதம் 46:10)

இதை நாம் சேர்ந்து பயிற்சி செய்வோம்!

  • ஒரு அமைதியான சூழலில், சற்று ஜாக்கிரதையாக உட்காரவும். உதாரணமாக, உள்ளங்கைகளை திறந்து வைத்துக்கொண்டு உட்காரவும், படுத்து தூங்கிவிட வேண்டாம்.
  • கவனத்தை சிதறடிக்கும் காரியங்களை அகற்றவும். உங்கள் தொலைபேசியை அணைக்கவும் மற்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை நிறுத்தவும்.
  • ஒரு சாதாரண இலக்கை வைத்துக்கொள்ளவும் – நீங்கள் நினைப்பதை விட இது சற்று கடினமானதுதான்! தொடங்குவதற்கு முன் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கடிகாரத்தில் டைமரை வைத்துக்கொள்ளவும்.
  • உங்களுக்கு ஒரு எளிய ஜெப வாக்கியத்தைக் கொடுக்கும்படி ஆண்டவரிடத்தில் கேளுங்கள், உதாரணமாக, “இதோ நான் வந்திருக்கிறேன்” என்று சொல்லுங்கள். உங்கள் மனம் அலைபாயும்போது, ஆண்டவர் மீது கவனம் செலுத்த அந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்லவும்.
  • கர்த்தருடைய ஜெபத்துடன் இதை நிறைவு செய்யவும், (மத்தேயு 6:9-13) மற்றும் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் அல்லது எவ்வளவு அனுபவித்தீர்கள் என்பதை வைத்து உங்கள் நேரத்தை மதிப்பிடுவதை தவிர்க்கவும்.
unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!