உன் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய திட்டங்கள் நீ கற்பனை செய்வதைக் காட்டிலும் மேலானது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய திட்டங்கள் நீ கற்பனை செய்வதைக் காட்டிலும் மேலானது!

இந்த வாரம், எரேமியா 29:11-ஐ பற்றிய ஒரு வேத பாடத்தை நாம் தியானிக்கத் தொடங்குவோம். வேதாகமத்தில், நான் மிகவும் விரும்பும் ஒரு வசனம் உள்ளது: “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” ஒவ்வொரு நாளும், இந்த அற்புதமான வசனத்தின் ஒரு பகுதியை விரிவாகப் படிப்போம். நம்முடைய விசுவாசத்தில் மேலும் வளரும்படி இவ்வசனத்தின் போதனைகள் மற்றும் கோட்பாடுகளை நாம் ஆராய்வோம்!

வேதாகமம் இவ்வாறு கூறுகிறது: “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (எரேமியா 29:11)

வேதாகமம் இங்கே என்ன திட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது? நாம் ஒன்றாக இணைந்து இதைப் பற்றி ஆராய்வோம்.

ஆண்டவர் உன்னைத் தனிப்பட்ட முறையில் அறிவார். உன் ஆசைகள், திட்டங்கள், கனவுகள், பயங்கள் மற்றும் உனக்கு முடியாதவை எனத் தோன்றும் பல காரியங்களை அவர் அறிவார். உன் தலையில் உள்ள முடிகளின் எண்ணிக்கையைக்கூட அவர் அறிந்திருக்கிறார்; மேலும் உன் குறைபாடுகள் ஒவ்வொன்றையும் அவர் பொருட்படுத்துவதில்லை.

வேதாகமம் நமக்கு இதைத்தான் சொல்கிறது: “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 1:5)

ஆண்டவர் உன்னைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். அவர் உன்னை வேறு பிரித்தெடுத்திருக்கிறார். இது உனக்கு ஒரு நல்ல செய்தி. அப்படித்தானே?

உன் வாழ்க்கைக்கான திட்டங்களை அவர் வைத்திருக்கிறார். அவரது திட்டங்கள், நீ கற்பனை செய்வதைக் காட்டிலும் மேலானது என்பதால், உன்னை அவருக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தி, அதன் பின் திட்டங்களை செயல்படுத்துவார்.

உன் திட்டங்களில் ஆண்டவருக்கு நீ முதலிடம் கொடுத்தால், நீ எதைச் சாதிக்க விரும்புகிறாயோ அதை நிறைவேற்றும் வலிமை உனக்குள் எப்போதும் இருக்கும். உன்னுடன் ஆண்டவர் இருக்கும்போது, ​​உன்னைப் பயமுறுத்துகிற எதுவானாலும், அது உன் மீது எந்த பலத்தையும் செலுத்த முடியாது. ஆண்டவருடன் இருக்கும் ஒரு நபர் எப்போதும் பெரும்பான்மையுள்ளவராகவே இருக்கிறார்.

இன்று இதுவே உனக்கான எனது ஜெபம்: நீ உன் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தின் மத்தியிலும் ஆண்டவரை நிறுத்த வேண்டும் என்பதே எனது ஜெபம். அவர் உன்னை அறிவார்… உனக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார். அவர் உனக்கு அருகில் இருக்கும்போது, சகலமும் உனக்கு சாத்தியமே!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!