உன் ஜெப வாழ்வின் 3 “வழிமுறைகள்” யாவை?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் ஜெப வாழ்வின் 3 “வழிமுறைகள்” யாவை?

உன் செல்போனில், தேர்வு செய்வதற்கான பல வழிமுறைகள் உள்ளன: அமைதி வழி(silent mode), அதிர்வு வழி(vibrate mode) அல்லது ஒலியெழுப்பும் வழி(ring mode). கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்விலும் இந்த முக்கியமான மூன்று வழிமுறைகளும் நமக்குத் தேவையாய் இருக்கிறது!

  • நமக்கு அமைதி வழிமுறை தேவை. அமைதியாக இருப்பது எப்படி என்று நமக்குத் தெரியாவிட்டால், ஆண்டவரது சத்தத்தை நம்மால் எப்படிக் கேட்க முடியும்? சில நேரங்களில், அமைதியாக இருப்பது நமக்கு மிகவும் கடினம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் வேதாகமம் நம்மை இவ்வாறு ஊக்குவிக்கிறது: “கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே.” (சங்கீதம் 37:7)
  • நமக்கு அதிர்வு வழிமுறை தேவை… வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், நமது உள்ளத்தில் எச்சரிக்கும் பரிசுத்த ஆவியானவரின் சத்தத்தைக் கேட்க நிரந்தரமாக இடமளிக்க வேண்டும். அவர் நமது மிகச்சிறந்த ஆலோசனைக் கர்த்தராய்‌ இருக்கிறார்: “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.” (ரோமர் 8:26)
  • நமக்கு ஒலியெழுப்பும் வழிமுறை தேவை… அதாவது ஜெபிக்கும் வழிமுறை தேவை; நாம் ஜெபிக்கும்போது ஆண்டவரிடத்தில் சத்தமாகப் பேச வேண்டும்: “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” (பிலிப்பியர் 4:6)

இந்த மூன்று வழிமுறைகளையும் நமது ஜெப வாழ்வில் ஒன்றாய் செயல்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!

இன்னும் சொல்லப்போனால், நமது செல்போன்களில் இன்னும் ஒரு பயன்முறை உள்ளது… ஆனால் ஆண்டவருடனான நமது உறவில், நாம் அதை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும். விமானப் பயன்முறை(airoplane mode) (தொடர்பு துண்டிக்கப்பட்டிருத்தல்)! நாம் இந்த பயன்முறையை செயல்பாட்டில் வைத்திருக்கும்போது, ​நம்மால் எந்த அழைப்புகளையும் மேற்கொள்ளவோ ஏற்கவோ முடியாது, அவ்வாறே, எந்த செய்திகளையும் பெறவோ அல்லது அனுப்பவோ முடியாது…

உனக்குள் வாழும் பரிசுத்த ஆவியானவர் மூலம் கர்த்தரோடு இணைந்திரு!

இன்று நீ ஆண்டவரிடமிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதாக உணர்வாயானால், இந்தப் பாடலைப் பாடி ஆண்டவரை ஆராதித்து, அவருக்கு அருகில் நெருங்கி வர 5 நிமிடங்களை ஒதுக்குமாறு நான் உன்னை ஊக்குவிக்கிறேன். https://youtu.be/z7LFUlMCuog?si=XpVHiTElXl9HbvO

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!