உன் எதிர்மறை எண்ணங்களை அடியோடு தூக்கி எறிந்துவிடு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் எதிர்மறை எண்ணங்களை அடியோடு தூக்கி எறிந்துவிடு!

“ஓ, நான் ஊமையாய் இருக்கிறேன்…!” “நான் குணமடையாவிட்டால் என்ன செய்வது?” “தோற்றுப்போய்விடுவேனோ என்று நான் பயப்படுகிறேன்.” “என் வாழ்நாள் முழுவதும் நான் குறையுள்ளவனாய் இருந்துவிடுவேனோ?”

எதிர்மறையான எண்ணங்கள் உன்னை அழித்துவிடும். அவை உன் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் உன்னிடமிருந்து பறித்துவிடும். அவை உன் ஆரோக்கியத்தையும், உன் உறவுகளையும் புதைத்துவிடும்… மேலும் நீ அதை மேற்கொள்ளும்படியான முயற்சி எதையும் செய்யவில்லை என்றால், அவை அடுத்த நிலைக்குச் சென்று பயங்கரமான சேதத்தை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் நிச்சயமாக, ஒரு தீர்வு உண்டு: இந்த எண்ணங்களை உன்னை விட்டு அகற்ற முடிவு செய்! “தர்க்கங்களைப் புறக்கணி”, “ஒவ்வொரு எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைபடுத்து” என்று சொல்லி வேத வாக்கியம் உன்னை ஊக்குவிக்கிறது. அதைத்தான் நாம் இங்கே வாசிக்கிறோம்: “அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 10:5).

உன் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் வந்து தங்கும்போது, நீ என்ன செய்வாய்? அது உன் மீது ஆதிக்கம் செலுத்தும்படி நீ இடமளிக்கிறாயா? அல்லது ஆண்டவருடைய வார்த்தையையும், அவர் உனக்காக வைத்திருக்கும் அவருடைய சித்தத்தையும் மனதில் வைத்து இந்த எண்ணங்களை நிதானிக்கிறாயா?

உன்னை வழிநடத்துவது உன் எதிர்மறையான எண்ணங்கள் அல்ல என்பதை அறிந்துகொள்… அவை எங்கு செல்ல வேண்டும் என்பதை நீதான் தீர்மானிக்கிறாய்! இந்த எதிர்மறை எண்ணங்களை உன்னால் துரத்திவிட முடியும்; அவற்றை விரட்டிவிடலாம்; பின்னர் அவை போன பிறகு, அந்த இடத்தை அப்படியே காலியாக வைத்திருக்கக் கூடாது!

உண்மையில், இந்த எண்ணங்கள் திரும்பவும் உனக்குள் வராதிருக்க, அவை மற்ற எண்ணங்களால் மாற்றியமைக்கப்பட வேண்டும். 😊 ஆகவே, இயேசுவை மட்டுமே நோக்கிப் பார்க்குமாறு வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது. அவரை நோக்கிப் பார். சிலுவையின் மூலம் மீண்டும் அவர் வெற்றியைக் கொண்டுவந்தார் என்பதை நீ உனக்குத் திரும்பத்திரும்ப நினைவுபடுத்திக்கொள்.

இந்த விஷயங்களை உன் மனதின் கண்முன் வைத்திரு:

  • உன் வாழ்க்கைக்கான அவருடைய வாக்குத்தத்தங்கள் (சங்கீதம் 105:8 மற்றும் சங்கீதம் 119:114)
  • உன் மீதுள்ள அவரது நிபந்தனையற்ற அன்பு (எரேமியா 31:3)
  • ஒவ்வொரு நாளுக்கும் உன் மகிழ்ச்சிக்கான அவருடைய திட்டங்கள் (யோபு 22:21)

இன்று, எதிர்மறையான எண்ணங்கள் உன்னை சீர்குலைத்து, சிறுமைப்படுத்த இடமளிக்க வேண்டாம்… இயேசுவின் நாமத்தில் அவற்றை முறியடித்துவிடு! உன் எண்ணங்கள் கிறிஸ்துவால் நிரப்பப்படுவதாக!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்களது தினசரி ஊக்கமளிக்கும் மின்னஞ்சலுக்கு நன்றி… பொதுவாக எதிர்மறையான விஷயங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் உலகில், உங்களது மின்னஞ்சல்களை வாசித்து எனது நாளைத் தொடங்குவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் எங்களுக்காக வாழ்வதால், ஆண்டவர் உங்களையும் உங்கள் மனைவியையும் ஆசீர்வதிப்பாராக. என் இருள் சூழ்ந்த நேரங்கள் ஒன்றில் நீங்கள் எனக்கு வெளிச்சமாக இருந்தீர்கள்… நீங்கள் எழுதும் ஜெபங்களில் ஒன்றை நான் தனியே எடுத்து பத்திரமாக வைத்திருக்கிறேன், ஒவ்வொரு முறையும் நான் தொய்ந்து போகும்போது, அதை வாசித்து ஊக்கம் பெறுகிறேன்.” (சரண்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!