உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது? 🤗

முகப்பு ›› அற்புதங்கள் ›› உன் ஆத்துமா ஏன் கலங்குகிறது? 🤗

இன்று, சங்கீதம் 42:5-6 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடரை நாம் தியானிக்கத் தொடங்குகிறோம். கலக்கத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதையும், அதிலிருந்து தப்பிக்க வேதாகமம் தரும் உத்திகளையும் நாம் பார்க்கப்போகிறோம்!

“என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.” (சங்கீதம் 42:5-6)

இந்தப் பத்தி எனக்கு மட்டுமல்லாமல் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. “நீ ஏன் கலங்குகிறாய்?” இதைக் குறித்து யோசித்து இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க என்னுடன் சிறிது நேரம் ஒதுக்குவாயாக.

உன் சொந்த யோசனைக்குச் செவிசாய்ப்பது நல்லது. நானும் கூட தொடர்ந்து செவிகொடுக்கிறேன். உன் சொந்த பகுத்தறிவை விட்டு வெளியே வந்து, “நான் ஏன் இப்படி நினைக்கிறேன், உண்மையில் நான் யோசிப்பது சரிதானா” என்று உன்னை நீயே கேட்டுக்கொள்.

“ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.” என்று வேதாகமம் நமக்குச் சொல்கிறது. (எபிரெயர் 12:3)

மனச்சோர்வை உனக்குள் குடிகொண்டிருக்க அனுமதிக்க வேண்டாம். மனச்சோர்வு உட்பட அனைத்தையும் இயேசு சுமந்து தீர்த்துவிட்டார். இதனால் சோர்ந்துபோதல் மற்றும் தோல்வியடைதல் என்று அழைக்கப்படும் இந்தச் சோதனையின் மத்தியில் நம்மால் வெற்றிபெற முடியும். வாழ்க்கை உன்னை சோர்வுக்குள்ளாக்கும்போது அல்லது தோற்கடிக்கும்போது,​ ஆண்டவர் உன்னைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைதான் இது: “தைரியமாக இரு”!

இதுவரை வேறு யாரும் உன்னிடம் இதைச் சொல்லியிருக்கவில்லை என்றால், பரவாயில்லை, நான் உன்னிடம் கூறுகிறேன் தைரியமாயிரு! முன்னேறு, விடாமுயற்சி செய், அவருடைய பலத்தினால் பந்தயத்தை ஓடி முடி!

இந்தப் பாடலைக் கேட்கும் வேளையில் உன் மனக்கலக்கம் நீங்கி, நீ ஊக்கம் பெறுவாய் என்று நான் நம்புகிறேன். https://youtu.be/gRX7YqVC728?si=LJK0jte0GjHAjtms

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!