உன்னை எதுவும் தடுத்து நிறுத்த விடாதே!
முகப்பு ›› அற்புதங்கள் ››
நல்லதையே செய்ய வேண்டும், நல்ல காரியங்களைச் செய்து இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்ற வேண்டும் என்ற ஆசையை ஆண்டவர் ஒவ்வொரு மனுஷனுடைய இருதயத்திலும் வைத்திருக்கிறார் என்று நான் முழுநிச்சயமாக நம்புகிறேன். சில சமயங்களில் நம் வாழ்க்கைச் சூழ்நிலைகள் நமது குறிக்கோள்களிலிருந்து நம்மை வழிவிலகிப்போகச் செய்தாலும், அது நம்மைத் தட்டி எழுப்பும் ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.
உனக்கும் அப்படித்தான் நடக்கிறது அல்லவா? எது உன்னைத் தட்டி எழுப்பிவிடுகிறது? உன் வாழ்க்கையில் நீ எதை சாதிக்க விரும்புகிறாய்?
ஆண்டவர் “… நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்” என்று வேதாகமம் சொல்கிறது. (தீத்து 2:14)
கஷ்டங்கள் வரும்போதிலும் வைராக்கியம் நம்மை முன்னோக்கி பயணம் செய்ய வைக்கிறது. வைராக்கியம் என்பது நமக்குள் இருக்கும் நெருப்பாகும், அது நம்மை முன்னோக்கிச் செல்லும்படி உந்தித் தள்ளுகிறது, நம்மை செயல்பட வைக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் வைராக்கியம் குறைந்துபோகக் கூடும். அப்படிக் குறைந்துபோகும்போது, அக்கினியை அனல் மூட்டி எழுப்பி, இன்னும் அதிக வைராக்கியத்தை நமக்குள் பற்றியெரியச் செய்யும்படி நாம் ஆண்டவரை அழைக்கலாம்!
உன்னை எதுவும் தடுத்து நிறுத்த விடாதே; உன் குறிக்கோள் உனக்கு முன்பாக உள்ளது. உனக்கு முன்பாக சிறந்த காரியங்கள் வைக்கப்பட்டுள்ளன! அழகான காரியங்களை நீ செய்ய வேண்டி உள்ளது.
ஆண்டவர் உன்னை நினைத்து, உனக்காக விசேஷமாக ஆயத்தம்பண்ணின கிரியைகளையும், அவர் உன் மூலம் என்ன செய்ய இருக்கிறார் என்பதையும் அறிந்திருக்கிறார்.
ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து, இன்று உன் வைராக்கியத்தைப் புதுப்பிக்கட்டும்! அவர் புதுப்பிப்பார் என்பதை நான் நிச்சயம் அறிவேன்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “இந்தச் செய்தி மிகவும் வல்லமை வாய்ந்ததும், தைரியமளிப்பதும் மற்றும் ஊக்கமளிப்பதுமாய் இருக்கிறது. ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலுக்கு நன்றி; இது என் ஆவிக்குரிய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.” (நோபல்)