உனது நேரத்தை நிர்வகித்தல் என்பது உனது முன்னுரிமைகளை நிர்வகிப்பதாகும்

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனது நேரத்தை நிர்வகித்தல் என்பது உனது முன்னுரிமைகளை நிர்வகிப்பதாகும்

ஒரு நாளில் உனது நேரத்தை அதிகமாக எடுக்கும் விஷயங்களை நீ பட்டியலிட வேண்டுமென்றால், அதில் எந்தெந்த விஷயங்களுக்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும்? நீ அவற்றைப் பட்டியலிட்டு அதில் திருப்தி அடைவாயா? அல்லது சில விஷயங்களை மாற்றி அமைத்து, அவற்றைக் குறைக்க முற்படுவாயா?

“எனது குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிட விரும்புகிறேன், ஆனால் நான் வேலையில் மூழ்கியிருக்கிறேனே. நான் இன்னும் அதிகமாக வாசிக்க விரும்புகிறேன், ஆனால் என்ன செய்வது… நான் சமூக வலைதளங்களில் அல்லது சில டிவி தொடர்களைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுகிறேன்…” என இப்படிப்பட்ட வார்த்தைகளை ஒருவேளை நீ சொல்ல முற்படலாம்.

பாஸ்டர் கிரெய்க் க்ரோஷெல் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “நீ தொடர்ந்து விரக்தியடைந்தால், நீ அதிகம் பொருட்படுத்தாத காரியங்களில் அதிக நேரத்தையும், உண்மையில் முக்கியமான விஷயங்களைச் செய்ய குறைவான நேரத்தையும் நீ செலவிடுவாய்”.

ஒரு நாளின் முடிவில் எப்படியாயினும் நாம் அனைவரும் நம் நேரத்தை ஏதாவது ஒன்றில் செலவு செய்திருப்போம்: நமதுவேலை, நமது குடும்பம், நமது பொழுதுபோக்குகள் என இப்படிப்பட்ட ஒன்றில் நம் நேரத்தைச் செலவிட்டிருப்போம்.

“உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” (மத்தேயு 6:21)

உனது நேரம் உனது பொக்கிஷம் என்றால், அதை முதலீடு செய்யும் பகுதிகளே உனது முன்னுரிமை.

நீ உன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும்போது மட்டும்தான் உன் உறவுகள் பலப்படும். நீ ஆண்டவருக்காக நேரத்தை ஒதுக்கும்போதுதான் அவர் மீதான உன் அன்பு வளர்ச்சியடையும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உன் நாட்களை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் அந்த நாளைத் தொடங்குவது என்பது மிக முக்கியமான விஷயம்: உனது முன்னுரிமைகள் என்ன? ஆராய்ந்து பார்.

பிரதானமானது எதுவென நீ தீர்மானித்துவிட்டால், இந்தச் செயல்களை மையமாகக்கொண்டு உன் நேரத்தை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதை நீ நன்கு அறியத் தொடங்கிவிடுவாய். அவைகளுக்காக நீ எவ்வளவு நேரத்தையும் கவனத்தையும் செலவிடுகின்றாயோ, அவ்வளவு அதிகமாக அவைகளின் மீது உன் ஆர்வம் வளருவதை நீ காணலாம்.

இயேசு அதிக அலுவலாக இருந்தபோதிலும், ஆண்டவருடன் செலவிட நிறைய நேரத்தை ஒதுக்கினார். மேலும் அவர் ஒரு புயலின் மத்தியில் கூட நித்திரை செய்துகொண்டிருந்தார்! ஓய்வும், பிதாவுடனான நிலையான உறவும் அவரது ஊழியத்திற்கு அவசியமாக இருந்தது.

இன்று, உன் முன்னுரிமைகளுக்கு உரிய நேரத்தைக் கண்டறிய உதவும்படி ஆண்டவரிடம் கேள்.

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நன்றி எரிக்! இது என் கண்ணைத் திறக்கவைத்ததைப் போன்று இருக்கிறது. வேலையின் மும்முரத்தில் சிக்கி, ஜெபிப்பதையே நான் நிறுத்தி விட்டேன்! உங்களது மின்னஞ்சல்கள்தான் என்னைத் தட்டி எழுப்பியது. இன்னும் வாய்ப்பு உள்ளது, இடைவிடாமல் ஜெபி என்று ஆண்டவர் என்னிடம் சொல்கிறார்! நீங்கள் ஆசீர்வாதமான பாத்திரமாய் இருப்பதற்கு நன்றி!!! :)” (பிரீத்தி)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!