உனக்கு ஒத்தாசை எங்கிருந்து வருகிறது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்கு ஒத்தாசை எங்கிருந்து வருகிறது?

தாவீது ராஜா பெரும்பாலும் ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்தார். அவர் எழுதிய பல சங்கீதங்களில்‌ இதைப் பற்றிப் பேசுகிறார். பலமுறை, சவுல் ராஜாவும் மற்றும் பலரும் அவரைக் கொலை செய்ய முயற்சித்தனர். ஆயினும், இப்படி நம்பிக்கையற்ற சூழ்நிலை ஒன்றில் தாவீது, “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும், பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” என்று அறிக்கையிட்டார். (சங்கீதம் 121:1-2)

மக்கள் அவரைக் கண்டுபிடித்து கொலைசெய்வதில் உறுதியாக இருந்தபோதும், அவரின் மரணம் அவரை நெருங்கியபோதும், “எனக்கு ஒத்தாசை ஆண்டவரிடமிருந்தே வருகிறது” என்று உறுதியாக அறிக்கையிட்டார். தாவீது தன் ஆண்டவரை விசுவாசித்தார். தாவீது தான் நம்பும் ஆண்டவர் தன்னைக் கைவிடமாட்டார் என்றும் மீண்டும் ஒருமுறை தன்னை தப்புவிக்க வருவார் என்றும் அவர் உறுதியுடன் நம்பினார் .

நான் இன்று உனக்குச் சொல்லவும் நினைவூட்டவும் விரும்புகிறது என்னவென்றால், உனக்கு வேண்டிய ஒத்தாசை மனிதர்களிடமிருந்தோ அல்லது சூழ்நிலைகளிடமிருந்தோ வருவதில்லை. மாறாக இயேசுவிடமிருந்து மட்டுமே வரும்.

இந்த வார துவக்கத்தில், ஆண்டவரிடம் திரும்பிவந்து சகலத்தையும் அவரிடம் ஒப்படைக்குமாறு உன்னை அழைக்கிறேன். நாம் சேர்ந்து ஜெபிப்போம்… “கர்த்தராகிய இயேசுவே, தாவீது ராஜாவைப்போலவே, நான் என் கண்களை உம்மை நோக்கி உயர்த்துகிறேன். நான் பலவித சவால்களை எதிர்கொண்டாலும், உமது கிருபையாலும் உமது உதவியாலும் எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். என்னை நிலைநிறுத்தும் உம்முடைய அன்புக்கும், எனக்கு உறுதியளிக்கும் உமது பிரசன்னத்துக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உமது நாமம் இன்றும் என்றும் பிரஸ்தாபப்படுவதாக! ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!