உனக்கு எவ்வளவு செல்வாக்கு உண்டு?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்கு எவ்வளவு செல்வாக்கு உண்டு?

நீ செல்வாக்கு மிகுந்த நபராய் இருக்கிறாய்.

சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தலைவர், போதகர் என்ற பட்டங்கள் நமக்கு இல்லையென்றாலும், நம் அனைவருக்கும் செல்வாக்கு உண்டு. ஏன் தெரியுமா? ஏனெனில் நம் வாழ்விலிருந்து வெளிப்படும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மற்றவர்களுக்கும் பரவுகிறது.

உதாரணமாக, ஒரு வாசனை மிகுந்த அல்லது விரும்பத்தகாத ஒரு நறுமணமானது ஒருவரது முகத்தில் புன்னகையை ஏற்படுத்தக் கூடும் அல்லது முகச்சுளிப்பை ஏற்படுத்தலாம்… அது ஒரு நல்ல மனநிலையை ஏற்படுத்தலாம் அல்லது கோபத்தைத் தூண்டிவிடலாம்… அது சோகத்தையோ அல்லது மகிழ்ச்சியையோ ஏற்படுத்தக் கூடும்.

நாம் நம்முடன் நெருக்கமாகப் பழகும் நபருக்குள் எதோ ஒன்றைக் கடத்துகிறோம். நீ அவர்களுக்கு என்ன சொல்லி அவர்களை அனுப்பிவிட விரும்புகிறாய்?

நாம் எதை பிறருக்கு வழங்க வேண்டும் என்பதைப் பற்றி வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது. “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’’ என்று இயேசு சொன்னார். (மத்தேயு 28:20)

ஆண்டவர் உன்னை நம்புகிறார், அவர் உன்னுடன் இருக்கிறார். இயேசு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பவைகளான, அன்பு, தயாள குணம் மற்றும் தயவு போன்ற இவைகளை உன்னைச் சுற்றிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் திறன் உனக்கு உள்ளது. பிதாவின் அன்புக்கு நேராக ஜனங்களை வழிநடத்த உன்னால் கூடும்!

ஆண்டவர் உன்னைத் தமது ராஜ்யத்தில் அதிக செல்வாக்கு பெற்ற நபராக மாற்ற விரும்புகிறார். நீ ஒரு ஸ்தானாதிபதி! நீ பூமியில் கிறிஸ்துவின் நற்கந்தமாய் இருக்கிறாய். நீ ஒன்றிலும் குறைவுற்றவன்/குறைவுற்றவள் அல்ல!

நீ தனியாக இல்லை என்ற நிச்சயம் உனக்கு உண்டு… இயேசு ஒவ்வொரு நாளும், உன்னை அற்புதமாக வழிநடத்தி, உனக்குத் துணையாக வருகிறார்.

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!