உனக்காக வழக்காடுபவர் உன் சார்பாக பேசுவார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› உனக்காக வழக்காடுபவர் உன் சார்பாக பேசுவார்!

“நீ ஒருபோதும் வெற்றியடைய மாட்டாய். இதை நீ கைவிடுவதுதான் சரி… இறுதியில் நீ தோற்றுவிடுவாய்”

இப்படிப்பட்ட வார்த்தைகளை நீ எப்போதாவது கேட்டிருப்பாயானால், நான் ஒரு மகத்தான செய்தியை உனக்கு வைத்திருக்கிறேன்… இன்று, உன்னைக் குற்றஞ்சாட்டுபவர்கள் பேசப்போவதில்லை – உனக்காக வழக்காடுபவர் பேசப்போகிறார்! உனக்காக வழக்காடுபவரும் உன் நண்பருமான இயேசு உன்னைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்…

  • உன்னை பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய உனக்கு பெலனுண்டு (வேதாகமத்தில் பிலிப்பியர் 4:13 ஐப் பார்க்கவும்)
  • நீ அவருடைய சிருஷ்டிப்பும், வாழ்வின் அதிசயமுமாய் இருக்கிறாய் (வேதாகமத்தில் சங்கீதம் 139:14 ஐப் பார்க்கவும்)
  • நீ முற்றிலும் ஜெயங்கொள்வாய் (வேதாகமத்தில் ரோமர் 8:37 ஐப் பார்க்கவும்)

நீ இயேசுவில் ஜெயங்கொள்வாய்! அவருடன் இணைந்து, இந்த உலகத்தை அசைப்பதற்கும், தேசங்களை ஆசீர்வதிப்பதற்கும், கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதற்கும் நீ பெரிய காரியங்களைச் செய்வாய். நீ தேவ ஆவியானவரின் ஆலயமாய் இருக்கிறாய், மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி, புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொடுத்து, அவர் உன்னை ஏவுகிறார்.

என் நண்பனே/தோழியே, நீ ஒரு பிரச்சனைக்குரிய நபர் அல்ல! நீ தீர்வுகளைக் கொண்டுவருகிற நபராய் இருக்கிறாய்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!