உண்மையில் கவலைக்கான தீர்வு நன்றி சொல்லுதலா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› உண்மையில் கவலைக்கான தீர்வு நன்றி சொல்லுதலா?

வேதாகமம் சொல்கிறது: “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6-7)

பற்றாக்குறை என்ற மனநிலையிலிருந்து உன்னை விடுவிப்பதற்கான முதல்படி, உன்னிடம் இப்போது இருக்கும் அனைத்திற்காகவும், மற்றும் நீ ஏற்கனவே பெற்றிருப்பவைகளுக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்த மறவாதிருப்பதாகும்.

இப்போதே இதைச் செய்ய சிறிது நேரம் ஒதுக்குவாயா?

ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதன் மூலம் உன் கவலைகளிலிருந்து உன்னால் விடுபட முடியும் என்பது உனக்குத் தெரியுமா?

நீ யார் என்பதற்கும், உன்னிடம் உள்ளவற்றிற்கும் அவருக்கு நன்றி சொல்வதே முதல் படியாகும். அதே நேரத்தில் இதுவே மிகப்பெரிய படியாகவும் இருக்கிறது, ஏனென்றால் உன் கவலைகள் மறைந்தவுடன், உன் விசுவாசம் பலப்படும்! நம்பிக்கையுடன் காத்திருக்கும் இருதயத்தில் வாசம்பண்ண ஆண்டவர் பிரியப்படுகிறார்!

“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1பேதுரு 5:7)

ஆண்டவருடைய வாக்குத்தத்தமானது அவருடைய இயற்கை சட்டங்களில் ஒன்றாகும்: உன் தேவைகளையும் கோரிக்கைகளையும் அவருக்குத் தெரியப்படுத்தினால், நீ அவருடைய உதவியையும் அவருடைய கிருபையையும் பெறுவாய்.

ஒருபோதும் கவலைப்படாதே, அதற்குப் பதிலாக, ஆண்டவரைத் துதித்து, அவருக்கு நன்றி சொல்லத் தொடங்கு!

இப்போது என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்… “ஆண்டவரே, ஞானம் நிறைந்திருக்கும் உமது வல்லமை வாய்ந்த வார்த்தைக்கு நன்றி. கவலையிலிருந்து விடுபடவும், உம்மில் முழுமையான சமாதானத்தைப் பெற்று வாழவும் நீர் எனக்குக் கொடுத்துள்ள ஒரு திறவுகோல்தான் நன்றி சொல்லுதல் என்பதை நான் உணர்கிறேன். எனக்காகவும் என்னிடம் உள்ள எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் சந்திக்கும் சூழ்நிலைகள் எல்லாவற்றையும் அறிந்து, என்னை நன்மையினால் நிரப்பி, உண்மையுடனும் பொறுமையுடனும் வாழும்படி ஒவ்வொருநாளும் என்னை வழிநடத்தியதற்கு உமக்கு நன்றி சொல்கிறேன். ஆண்டவரே, உமது நாமத்தை நான் ஸ்தோத்தரிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!