உங்கள் அம்மா எப்போதாவது உங்களைத் திட்டியிருக்கிறார்களா? 🗣

முகப்பு ›› அற்புதங்கள் ›› உங்கள் அம்மா எப்போதாவது உங்களைத் திட்டியிருக்கிறார்களா? 🗣

“வேண்டாம்….” என்ற வார்த்தையை உடைய ஒரு வாக்கியத்தை நாம் கேட்கும்போது, அது ஒரு எச்சரிக்கையாகவே நம் காதில் ஒலிக்கிறது. “உன் அழுக்குக் காலணிகளோடு வீட்டிற்குள் வராதே,” “உன் சகோதரியை அடிக்காதே” அல்லது “முகம் தெரியாதவர்களோடு பேசாதே” என்று நம் அம்மாக்கள் சொன்னதைக் கேட்டு வளர்ந்த நம் குழந்தைப் பருவத்திற்கு அது நம்மை அழைத்துச் செல்கிறது.

வேதாகமத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட வசனங்கள் “பயப்படாதே” என்ற சொற்றொடரைக் கொண்டிருக்கின்றன, பெரும்பாலும் அவை ஒரு ஊக்கப்படுத்தும் வார்த்தையோடு சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது. எனக்குப் பிடித்த சில வசனங்களை இங்கே காணலாம்:

  • “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசாயா 41:10)
  • “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.” (யோவான் 14:27)
  • “இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜூவாலை உன்பேரில் பற்றாது.” (ஏசாயா 43:1-2)

“பயப்படாதே” என்று ஆண்டவர் சொல்லும்போது, “நீங்கள் பயப்படாமல் இருப்பது நல்லது” என்று அவர் சொல்லவில்லை, கண்டிப்பான தாயைப்போல அவர் நம்மைக் கண்டிக்கவுமில்லை. மாறாக, அவர் நமக்குச் சிறப்பான ஒன்றை வழங்குகிறார் —‌அவருடைய பரிசுகளான சமாதானம் (யோவான் 14:27), மீட்பு (ஏசாயா 43:1-2), பலம் (ஏசாயா 41:10), ஆறுதல், நம்பிக்கை, விடுதலை என இன்னும் பல பரிசுகளை அவர் நமக்குத் தருகிறார்.

ஆண்டவரின் சொல்லிமுடியாத ஈவுகளுக்காக நாம் நன்றி சொல்லுவோம். “பரலோகத் தகப்பனே, என் பயங்களுக்குப் பதிலாக எனக்கு சமாதானம், மீட்பு, பலம், ஆறுதல், நம்பிக்கை மற்றும் விடுதலையைக் கொடுத்ததற்கு நன்றி. இன்று, எனக்குள் இருக்கும் இந்தக் காரியத்தைக் _______ குறித்த எனது பயத்தை உம்மிடம் வைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!