உங்களை நீங்களே சரிசெய்துகொள்ள முடியாது!
முகப்பு ›› அற்புதங்கள் ››
பந்தயத்தில் ஓடுவது அல்லது மலை ஏறுவது போன்ற உடல் ரீதியாக சவாலான ஒரு காரியத்துக்கு நீங்கள் ஆயத்தமாக வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? 🧗🏽♂️
நீங்கள் முறையாகப் பயிற்சி செய்து, நன்றாக சாப்பிட்டு, போதிய ஓய்வெடுப்பதை உறுதிசெய்வீர்கள், இல்லையா?
சரீரப் பிரகாரமான சவால்களுக்கு நம் உடலை ஆயத்தப்படுத்துவது போலவே, ஆவிக்குரிய கஷ்டங்கள் நேரிடும் காலங்களில் நம் ஆத்துமாக்களை நம்மால் ஆயத்தப்படுத்த முடியும்.
அவ்வாறு செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றுதான் தனிமை மற்றும் அமைதி; இதைத்தான் இயேசு செய்தார்.
“இயேசு அதைக் கேட்டு, [அவரது உறவினரான யோவான் ஸ்நானகன் கொல்லப்பட்டார்], அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார்.” (மத்தேயு 14:13)
நீங்கள் தனிமையையும் மௌனத்தையும் கடைப்பிடிக்கக் கற்றுக்கொள்ளும்போது, நேர்மறையானதும் மற்றும் எதிர்மறையானதுமான உங்கள் எண்ணங்களும் தற்போதைய காலகட்டமும் உணர்வுகளும் ஆண்டவருடனான உங்கள் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
தனிமையிலும் மௌனத்திலும் செலவிடும் நேரம் உங்களுக்கு அதிக பலனளிக்க வேண்டும் என்றால், மற்றும் ஆவிக்குரிய காரியங்களுக்குத் தேவையான அனைத்துக்கும் எதுவும் இடையூறாக இருக்கக் கூடாது என்றால், நீங்கள் ஆண்டவரை நெருங்குவதற்கு முன் “உங்களைச் சரிசெய்துகொள்ள வேண்டும்” அல்லது “உங்கள் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்” என்ற எண்ணம் உங்களுக்குள் வலுவாய் எழும்.
ஆனால், அது உண்மை அல்ல. நீங்கள் இருக்கும் இடத்திலேயே ஆண்டவர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். நீங்கள் துக்கத்தில் இருந்தால், அவர் உங்களை துக்கத்தில் சந்திப்பார்; நீங்கள் நன்றியுணர்வோடு இருந்தால், அவர் உங்களை அங்கே சந்திப்பார்.
இயேசுவின் உதாரணத்தைக் கவனியுங்கள்: கடினமான காலங்களில், தனிமையிலும் மௌனத்திலும் ஆண்டவரைத் தேடுவதே உங்கள் முதல் பணி. அவரால் மட்டுமே உங்கள் ஆத்துமாவைப் பராமரிக்க முடியும்; எனவே அவர் உங்கள் ஆத்துமாவைப் பராமரிக்க நீங்கள் இடமளியுங்கள்.
“நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.” (2 கொரிந்தியர் 1:3-4)
நாம் தொடர்ந்து பயிற்சி செய்வோம்:
- ஒரு அமைதியான சூழலில், சற்று ஜாக்கிரதையாக உட்காரவும். உதாரணமாக, உள்ளங்கைகளை திறந்து வைத்துக்கொண்டு உட்காரவும், படுத்து தூங்கிவிட வேண்டாம்.
- கவனத்தை சிதறடிக்கும் காரியங்களை அகற்றவும். உங்கள் தொலைபேசியை அணைக்கவும் மற்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை நிறுத்தவும்.
- ஒரு சாதாரண இலக்கை வைத்துக்கொள்ளவும் – நீங்கள் நினைப்பதை விட இது சற்று கடினமானதுதான்! தொடங்குவதற்கு முன் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கடிகாரத்தில் டைமரை வைத்துக்கொள்ளவும்.
- உங்களுக்கு ஒரு எளிய ஜெப வாக்கியத்தைக் கொடுக்கும்படி ஆண்டவரிடத்தில் கேளுங்கள், உதாரணமாக, “இதோ நான் வந்திருக்கிறேன்” என்று சொல்லுங்கள். உங்கள் மனம் அலைபாயும்போது, ஆண்டவர் மீது கவனம் செலுத்த அந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்லவும்.
- கர்த்தருடைய ஜெபத்துடன் இதை நிறைவு செய்யவும், (மத்தேயு 6:9-13) மற்றும் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் அல்லது எவ்வளவு அனுபவித்தீர்கள் என்பதை வைத்து உங்கள் நேரத்தை மதிப்பிடுவதை தவிர்க்கவும்.
