உங்களுக்கு “அன்பு செலுத்துவதிலிருந்து” இடைவேளை தேவையா? 🫶

முகப்பு ›› அற்புதங்கள் ›› உங்களுக்கு “அன்பு செலுத்துவதிலிருந்து” இடைவேளை தேவையா? 🫶

நாள் முழுவதும் நீங்கள் வேலையில் ஈடுபடும்போது வழக்கமாக இடைவேளை எடுக்கிறீர்களா? தேநீருக்கான ஒரு இடைவேளை, மதிய உணவுக்கான ஒரு இடைவேளை, இயற்கை உபாதைக்கான ஒரு இடைவேளை என ஒரு சிறிய இடைவேளையை எடுத்துக்கொள்கிறீர்கள். இந்த இடைவேளை ஓய்வெடுக்கவும், மீண்டும் ஆற்றலைப் பெற்றுக்கொள்ளவும் மற்றும் பாரத்தை இறக்கி வைக்கவும் உங்களுக்கு உதவும் 🤭

இருப்பினும், மிகவும் அவசியமான மற்றொருவகை இடைவேளை உள்ளது, அதை நாம் அடிக்கடி புறக்கணித்துவிடுகிறோம் அல்லது அதை முற்றிலும் மறந்துவிடுகிறோம், அதுதான்: “அன்பிற்கான இடைவேளை.” “அன்பிற்கான இடைவேளை” என்றால் என்ன என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் சரீரத்தைப்போலவே, உங்கள் ஆத்துமாவும் ஓய்வெடுக்க வேண்டும், மீண்டும் ஆற்றலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் நீங்கள் நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

ஒரு “அன்பிற்கான இடைவேளை” இயேசுவின் அன்பை ருசிக்க உங்களுக்கு உதவுகிறது.

ஒரு நாளின் எந்த நேரமாக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் சரி, இதைச் செய்ய சிறிது நேரம் ஒதுக்குவீர்களாக:

  • ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்திருங்கள் (லூக்கா 10:39-42)
  • ஆண்டவரின் சமூகத்தில் களிகூருங்கள் (சங்கீதம் 32:11)
  • ஆண்டவரின் வார்த்தையை தியானியுங்கள் (யோசுவா 1:8)

உங்களிடம் பேசும் அவருடைய அன்பான குரலுக்குச் செவிகொடுங்கள், “பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உன்னில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திரு.” (யோவான் 15:9)

எனவே, இந்த நாளில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக காரியங்கள் வந்துகொண்டே இருந்தாலும், இவற்றின் மத்தியிலும் சில நொடிகள் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு இடைவேளை எடுத்துக்கொள்ள மறவாதேயுங்கள். அவருடைய தோளின் மீது உங்கள் தலையை சாய்த்து, உங்கள் மீதான இயேசுவின் அன்பை ருசிப்பதை சற்று கற்பனைசெய்து பாருங்கள்! அமைதியாக புன்முறுவல் செய்யுங்கள் – ஆண்டவர் உங்களை நேசிக்கிறார்.

நீங்கள் என்னுடன் சேர்ந்து ஜெபிக்க விரும்புகிறீர்களா? “பரலோகத் தகப்பனே, உமது பிரசன்னத்தை அனுபவிக்கும்படி நேரம் ஒதுக்க எனக்குக் கற்றுத்தாரும். நாள் முழுவதும் உம் அன்பை உணர எனக்கு உதவுவீராக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

unnamed (7)

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!