இயேசு ஒருவரே சமாதானத்தை தருகிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயேசு ஒருவரே சமாதானத்தை தருகிறார்!

“நான் என்னுடைய குர்ஆனை எடுத்து, ஆண்டவரே, இது உம்முடைய வார்த்தையாக இருந்தால், இந்த புத்தகத்தின் மூலம் உம்மை எனக்கு வெளிப்படுத்துவீராக என்று ஜெபித்தேன். ஆனால், அதற்குப் பதிலாக, ஒரு காரியம் என்னைப் புதிய ஏற்பாட்டிற்கு நேராக ஈர்த்தது.”

இன்று, ஒரு புத்தகத்திலிருந்து (A Wind in the House of Islam) ஈரானிய பெண்ணாகிய நதியாவின் நம்பமுடியாத சாட்சியத்தை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நம்முடைய தேவன் உண்மையிலேயே இரட்சிக்கிற தேவனாக இருக்கிறார்! அவர் ஒருவரால் மட்டுமே நம் வாழ்வில் மெய்யான சமாதானத்தைக் கொண்டுவர முடியும்.

“என் குழந்தைப் பருவத்திலிருந்தே, நான் இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வமுள்ளவளாக இருந்தேன், நான் கிறிஸ்தவர்களைப் பார்க்கும்போது, ​​அவர்கள் எப்போதும் சமாதானத்துடன் இருப்பதாகத் தோன்றியது, அதிலும் முக்கியமாக, எங்களுக்கு அந்த சமாதானம் இல்லை என்று எனக்குத் தெரியும். எங்கள் குடும்பத்தில் நாங்கள் தினசரி நமாஸ் ஜெபம் செய்தோம், நாங்கள் எப்போதும் அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிட்டோம், ஆனால் உள்ளத்திற்குள் வெறுமை காணப்பட்டது. நான் எதையும் உணரவில்லை…”

நதியா அறிந்திருந்த வாழ்க்கையில் சமாதானத்தைப் பெறுவதைக் கற்பனை செய்வது கூட கடினமாக இருந்திருக்கும்… குற்றமும் போதைப்பொருளும் நதியாவின் குடும்பத்தை சீரழித்தன…

“எனது உறவினர் ஒருவர் கிறிஸ்தவராக மாறிவிட்டார் என்பதை நான் தெரிந்துகொண்டேன். அவருடைய குடும்பத்தினர் எங்களைச் சந்திக்க வந்திருந்தபோது, ​​அவரிடம் ஒரு புதிய ஏற்பாட்டைக் கேட்டு வாங்கினேன், பின் அதை வாசித்தேன். மனதிற்குள் நான் போராடிக்கொண்டிருந்தேன். எனவே, ‘ஆண்டவரே, உண்மையில் எது சத்தியம் என்பதை எனக்குக் காண்பித்தருளும்’ என்று நான் ஜெபித்தேன். அன்று இரவு நான் வீட்டிற்கு வந்ததும், எனது குர்ஆனை எடுத்து, ஆண்டவரே, ‘இது உமது வார்த்தையாக இருந்தால், இந்த புத்தகத்தின் மூலம் உம்மை எனக்கு வெளிப்படுத்தும்’ என்று ஜெபம் செய்தேன். ஆனால், ஏதோ ஒன்று என்னைப் புதிய ஏற்பாட்டிற்கு நேராக ஈர்த்தது.

அதை வாசித்தபோது, ​​பழைய கதவு போல என் இருதயம் திறந்திருப்பதை உணர்ந்தேன், ஒவ்வொரு வசனத்தையும் என் முழுமனதுடன் புரிந்துகொண்டேன்… அன்றிலிருந்து இயேசுவின் கிரியை எனக்குள் ஆரம்பித்தது. நான் ஒருபோதும் அறிந்திராத ஒரு வித்தியாசமான மகிழ்ச்சி அது. இயேசுவைப் பற்றி ஒவ்வொருவரிடமும் சொல்லும் சமாரியப் பெண் போல இருந்தேன். ஒரே வாரத்தில் என் கணவர் சாசனும் மூன்று குழந்தைகளும் கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தனர்.”

நதியாவின் சாட்சி இந்நாட்களில் ஈரானில் எழும்பிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான சாட்சிகளில் ஒன்றாகும், இது நிச்சயமாகவே ஈரான் வரலாற்றில் முகமதியர்களைக் கிறிஸ்துவின் பக்கம் திரும்பச் செய்த மிகப்பெரிய திருப்பமாக இருக்கிறது. “மேலும் இன்று உலகில் மிக அதிகமான முகமதியர்கள் கிறிஸ்துவிடம் திரும்பிய ஒரு திருப்பமாகக் கூட இது இருக்கலாம்” என்று நதியா கூறினார்.

இயேசு தரும் சமாதானம் உலகம் முழுவதும் ஆளுகை செய்யும்படி நாம் ஒன்றாக சேரந்து ஜெபிக்கையில் ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பாராக!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!