இயேசுவுடன் உறுதியாக இணைந்திருக்கிறாயா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
“நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்று இயேசு சொன்னார். (யோவான் 15:5) இயேசுவே மெய்யான திராட்சை செடி. இதன் அர்த்தம் சகலமும் அவரிடமிருந்தே வருகிறது என்பதாகும். கிளைக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய அனைத்தும் கொடியிலிருந்து வருகிறது. கிளை தானாகப் பலனைத் தர முடியாததுபோல, நீ இயேசுவோடு இணைந்திருக்கவில்லை என்றால் உன்னாலும் பலன் தர முடியாது!
இயேசுவோடு இணைந்திருப்பதன் அர்த்தம் என்னவென்றால்…
- உன் எண்ணங்களை அவர் மீது ஸ்திரமாக வைத்தல்,
- அவருடைய பிரசன்னத்திற்கு உன் இதயத்தைத் திறந்து வைத்தல்,
- அவருடைய சித்தத்திற்கு ஏற்ப உன் செயல்களை அமைத்தல்.
கிளையானது தானாக ஜீவனைப் பெற்றிருப்பதில்லை. அது மரித்துப்போன ஒரு மரத் துண்டாக இருக்கும், அது செடியிலிருந்து நேரடியாக தன் ஜீவனை ஈர்க்கிறது. அது செடியுடன் இணைந்திருந்தால் மட்டுமே திராட்சைப் பழத்தை உற்பத்தி செய்து பலன்தர முடியும். பின்னர் பல்வேறு வண்ணங்களில் சுவையானதும் அற்புதமானதுமான பழம் கிடைக்கும், அதைக்கொண்டு பழச்சாறு அல்லது திராட்சை ரசம் தயாரிக்கப்படும்.
நமக்குத் தேவையான அனைத்தும் கிறிஸ்து இயேசுவில் இருக்கிறது என்று வேதாகமம் கூறுகிறது. அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம். மேலும் அவர் மூலமாக, ஆண்டவருக்காக மகத்தான சாதனைகளைச் செய்யவும், மிகப்பெரிய காரியங்களைச் செய்யவும், அவருடைய மகிமைக்காக ஏராளமான கனிகளைக் கொடுக்கவும் நாம் பெலப்படுத்தப்பட்டுள்ளோம்!
இன்று, அவர் இல்லாமல் உன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை அறிந்துகொள். ஒரு கிளையாக, திராட்சைச் செடியாகிய இயேசுவை உறுதியாகப் பற்றிக்கொள்வதே உன் வேலையாகும்!
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “தினமும் ஜெபம் மற்றும் தியானத்தின் மூலம் ஆண்டவருடன் ஸ்திரமான தொடர்பை நான் வைத்திருப்பது முக்கியமாகும், மேலும் தேவனுடன் நான் தினமும் உரையாடுவதற்கு ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.” (கிளாரா, வேலூர்)
