இயற்கைக்கு வெற்றிடம் பிடிக்காது… உன் மூளையும் அப்படித்தான்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இயற்கைக்கு வெற்றிடம் பிடிக்காது… உன் மூளையும் அப்படித்தான்!

நீ எப்போதாவது உன் மனதில் எந்த எண்ணத்தையும் வைத்திராமல் இருக்க முயற்சித்திருக்கிறாயா? உண்மையிலேயே, இது மிகவும் கடினமானது, ஏனென்றால் நாம் எப்போதும் எதையாவது நினைத்துக்கொண்டிருப்போம்! நாம் “நம் மனதில் எதையும் நினைக்காமல் இருக்க” விரும்புகிறோம் என்றால்,​​ அது பெரும்பாலும் மன அழுத்தம், கவலை, எதையாவது பற்றி யோசித்தல், ஒழுங்குபடுத்த முயற்சித்தல் போன்றவற்றால் அப்படிச் செய்ய நினைக்கிறோம். பிரச்சனை என்னவென்றால், இயற்கையானது காலியிடத்தை வெறுக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உன் மூளை எப்போதும் ஏதாவது ஒரு எண்ணத்தால் “நிரப்பப்பட்டிருக்க” வேண்டும் என்று விரும்புகிறது… கேள்வி என்னவென்றால், அது எதினால் நிரப்பப்பட வேண்டும்?

வேதாகமம் இதைப் பற்றி நமக்குத் தெளிவாகக் கூறுகிறது, “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.” (பிலிப்பியர் 4:8)

இவ்வாறு, எதிர்மறையான எண்ணங்களை அல்லது தாழ்வுமனப்பான்மையை உண்டாக்கும் எண்ணங்களை உன் மனதிலிருந்து அகற்றிவிட வேண்டும்; அவற்றை நீ வேறு எண்ணங்களால் “நிரப்ப” வேண்டும். ஆண்டவர் செய்திருக்கும் உடன்படிக்கையை அறிவிக்கும் வார்த்தைகளாலும், பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்ட வார்த்தைகளாலும் நம் எண்ணங்கள் நிரப்பப்பட வேண்டும்.

ஜாய்ஸ் மேயர் இவ்வாறு கூறுகிறார்: “நீ நல்லதைப் பற்றிச் சிந்திக்கும்போது, ​​உன் மனதிற்குள் தவறான எண்ணங்கள் நுழைவதற்கு இடமிருக்காது.”

ஆகவே, உன் எண்ணங்களையும் மனதையும் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் மற்றும் உன் வாழ்க்கைக்கான அவருடைய சித்தத்தின் மீது செலுத்தும்படி நான் உன்னை ஊக்குவிக்கிறேன். ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது, உன் காது அவருடைய சத்தத்துக்குக் கவனமாய் செவிகொடுத்து, அவருடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கட்டும்.

இவ்வாறு கூறி, உன் மூளையை நிரப்பு: “ஆம், கிறிஸ்துவால் எல்லாம் கூடும்! இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும்! இன்று மீண்டும், ஆண்டவர் எனக்காக இருக்கிறார், என்னுடன் இருக்கிறார்!” (2 நாளாகமம் 32:8, சங்கீதம் 46:11)

இப்போது என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உன்னை அழைக்கிறேன்… “கர்த்தாவே, சில சமயங்களில் இந்த எதிர்மறையான எண்ணங்கள் என்னை மிகவும் வருத்துகின்றன, என்னை கவலையடையச் செய்கின்றன… அவற்றை மேற்கொண்டு, உமது வார்த்தையாலும், உமது எண்ணங்களாலும் என் மனதை நிரப்ப எனக்கு உதவுவீராக. என் எண்ணங்கள் தூய்மையானதாகவும், உம்மைப் பிரியப்படுத்துவதாகவும் இருப்பதாக! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!