இன்று, சகலத்தையும் செய்ய வல்லவரிடம் திரும்பு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்று, சகலத்தையும் செய்ய வல்லவரிடம் திரும்பு!

“அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று.” (ஆதியாகமம் 14:22)

நீ எதிர்பார்த்தபடி எல்லாம் நடக்காதபோது யாரிடம் திரும்புவாய்? முதலில் யாருடன் பேசுவாய்? சில நேரங்களில் நமது முதல் உள்ளுணர்வு ஒரு நண்பரை அழைப்பதாக இருக்கும், ஆனால் உண்மையில் இது சிறந்த தேர்வா?

நீ நம்பக்கூடிய ஒருவரை நம்புவது தவறல்ல. ஆயினும், முதலில் ஆண்டவரிடம் திரும்புவது இன்னும் சிறந்தது… ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், எல்லாவற்றையும் செய்ய வல்லவராயிருக்கிறார்!

ஆண்டவர் உன் வாழ்க்கையில் முதல் இடத்தை பெற்றிருக்க விரும்புகிறார்.

என்னுடன் அறிக்கையிடு : “ஆண்டவரே, என் கைகளை நான் உம்மிடம் உயர்த்துகிறேன். வானத்தையும் பூமியையும் படைத்த சர்வவல்லமையுள்ள தேவன் நீரே! உம்மால் எல்லாவற்றையும் செய்ய இயலும் என்று நான் விசுவாசிக்கிறேன். என் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் உம்மை முதல் இடத்தில் வைக்க நான் தேர்வு செய்கிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!