இன்று உங்கள் ஆத்துமா எப்படி இருக்கிறது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› இன்று உங்கள் ஆத்துமா எப்படி இருக்கிறது?

நீங்களும் நானும் மனிதர்கள்… இந்த பூமியில் இருக்கும் வரை, ஒவ்வொரு மனுஷனும் சந்திக்க வேண்டியதை நாம் தொடர்ந்து சந்திக்கிறோம்… சோர்வு! நிச்சயமாக, இந்த சோர்வு வெளிப்படையாக சரீரப்பிரகாரமாக இருக்கலாம், இருப்பினும், உண்மையில், அது மன ரீதியாகவும் அல்லது உணர்ச்சியாகவும் இருக்கக் கூடும்.

இந்த நேரத்தில் உங்கள் ஆத்துமா எவ்வாறு செயல்படுகிறது? எப்பொழுதும் அதே கஷ்டங்களை சந்திப்பதினாலும், அடிவானத்தில் ஜெயத்தைப் பார்க்கக்கூட முடியாமல் போராடுவதினாலும் நீங்கள் சோர்ந்துபோய் இருக்கிறீர்களா?

அப்படியானால், இந்த வாக்குத்தத்தங்கள் உங்களுக்காகத்தான்… “சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, உனக்கும் தான், சத்துவமில்லாதவனுக்கு அவர் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.” (ஏசாயா 40:29)

இது ஒரு நல்ல செய்தி அல்லவா!… ஆண்டவர் உன் சத்துவத்தைப் பெருகப்பண்ணுவதாக வாக்களிக்கிறார், அதில் உன் சரீரம் மற்றும் மன வலிமையும் அடங்கும்.

ஆம், ஆண்டவரால் உனக்குள் நம்பிக்கையைப் பெருகச் செய்ய முடியும் மற்றும் சோர்ந்துபோயிருக்கும் உன் ஆத்துமாவுக்கு சத்துவத்தை மீண்டும் அளிக்க முடியும்.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!