இன்னும் எவ்வளவு காலம்?
முகப்பு ›› அற்புதங்கள் ››
முதல் கிறிஸ்துமஸ் – இயேசு கிறிஸ்துவின் பிறப்பு – மற்றும் அவரது வருகைக்காக காத்திருக்கும் எதிர்பார்ப்பு ஆகியவை பற்றி நாம் பேசினோம்.
என் மகன் ஜாக்(zac) பிறப்புக்காக நான் காத்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. பொறுமை என்பது எனக்கு இயல்பாகவே இல்லாத ஒரு நற்பண்பு 😏 மேலும் என் வயிற்றில் இருக்கும் குழந்தையை சந்திக்க என்னால் பொறுமையாகக் காத்திருக்க முடியவில்லை.
அவன் பிறக்க வேண்டிய தேதியைக் கடந்து ஐந்து நாட்களுக்குப் பின்னரே பிறந்தான், ஆனால் தேதியைக் கடந்த இரண்டாவது நாளிலேயே, நான் காத்திருப்பதைக் கைவிடுவதைப்போல் உணர்ந்தேன், குழந்தையை அதிக நாட்கள் வயிற்றில் சுமக்கும் முதல் பெண் நானாக இருப்பேன் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன் 🤣🙈.
கர்த்தருக்காக் காத்திருப்பது என்பது, ஒரு குழந்தைக்காகக் காத்திருப்பதைப்போல, எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிறைந்த ஒரு அனுபவமாகும்; அவரது வருகை நம் வாழ்வில் என்ன ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்புடன், நமது இருக்கைகளின் விளிம்பில் நாம் அமர்ந்திருப்பது ஒரு வகையான காத்திருப்புதான்!
“கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன். எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப் பார்க்கிலும், அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.” – சங்கீதம் 130:5-6
இயேசு உன் வாழ்க்கையில் புதிய, எதிர்பாராத வழிகளில் வர விரும்புகிறார், புதிய வெளிப்பாடுகள் மற்றும் அதிக ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறார். அவரைத் தவறவிட்டுவிடாதபடிக்குக் காத்திரு!
நடைமுறையில், கர்த்தருக்காகக் காத்திருப்பதற்குப் பல வழிகள் உள்ளன, அதாவது ஜெபித்தல், ஆராதனை செய்தல், வேதம் வாசித்தல் மற்றும் முற்றிலும் அமைதியாக நேரத்தை செலவிடுதல் என பல வழிகளில் கர்த்தருக்குக் காத்திருக்கலாம்.
கர்த்தருக்காக சுறுசுறுப்பாகக் காத்திருப்பதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குமாறு உன்னை ஊக்குவிக்கிறேன். குறிப்பிடப்பட்ட செயல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கீழே உள்ள ஜெபத்துடன் கர்த்தருக்காகக் காத்திருக்கத் துவங்கு:
“கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உமது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்று நீர் எனக்காக வைத்திருக்கும் எந்த ஆசீர்வாதத்தையும் நான் இழக்க விரும்பவில்லை. என்னோடு பேசுவீராக. ஆமென்.”