இதோ வெற்றியின் இரகசியம்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
உனக்கு சூப்பர் ஹீரோ படங்கள் பிடிக்குமா? அவர்களில் சிலர் உண்மையிலேயே நமக்கு ஊக்கமளிப்பவர்களாக இருப்பதை நான் காண்கிறேன். எல்லாம் சாத்தியம்தான், எதிரியின் தாக்குதலில் ஹீரோ பலத்த அடிபட்டு நொறுக்கப்பட்டாலும், எதிரி வெற்றி அடைய முடியாது என்ற செய்தியை நாம் யாவரும் நம்புவதுபோலவே அவை என்னிடம் பேசி எனக்குச் செய்தி அனுப்புகின்றன.
ஆனால் சூப்பர் ஹீரோக்களைப் போல் இல்லாமல், உன் சூழ்நிலையில் நீ வெற்றியைப் பெற உனக்கு அசாத்தியமான பலம் தேவையில்லை… உனக்குத் தேவையானது ஏற்கனவே உன்னிடத்தில் உள்ளது! உண்மையில், வெற்றியை அடையும் வல்லமை உன் வசம்தான் உள்ளது. “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” (1 யோவான் 5:4)
உன் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய திட்டங்களுக்கு எதிராக நிற்கக்கூடிய யாவற்றையும் ஜெயிக்கவும், மனச்சோர்வை மேற்கொள்ளவும், பிசாசின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கவும், மனமடிவு மற்றும் பயத்தை மேற்கொள்ளவும் எல்லாவற்றையும் செய்ய வல்லவரான ஆண்டவர் மீது உன் விசுவாசத்தை வைத்துவிடு, அது போதுமானது!
நீ ஆண்டவருடைய பிள்ளையாக இருப்பதால், நீ உலகத்தை ஜெயித்திருக்கிறாய்! உன் வாழ்க்கையில் இந்த வெற்றியைப் பிரகடனம் செய், அறிவி, பாடு! எதிரி உன்னை அழிக்க மட்டுமே விரும்பும் ஒரு பொய்யன் ஆவான். ஆனால் உனக்குள் இருப்பவர் பலமுள்ளவர், பெரியவர், அவர் உனக்காக யாவற்றையும் ஜெயித்தார்.
எல்லாவற்றையும் நீ இழந்துவிட்டாய் என்று உன்னை நினைக்க வைக்கும்படி பிசாசுக்கு இடம் கொடாதே. உன் விசுவாசம் உன்னை வெற்றியடையச் செய்கிறது! இது ஆண்டவர் உனக்குள் வைத்திருக்கும் வல்லமை, இன்று அவரது வல்லமையால் உனக்குள் இருக்கும் வல்லமையை மீண்டும் புதுப்பிக்கிறார்!