இதோ உன் விலையேறப்பெற்ற பொக்கிஷம்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இதோ உன் விலையேறப்பெற்ற பொக்கிஷம்!

இந்தப் பூமியில் நீ பெற்றிருக்கும் விலையேறப்பெற்றதான உன்னுடைய மிகப்பெரிய பொக்கிஷம் என்ன என்பது உனக்குத் தெரியுமா? இல்லை இல்லை, நிச்சயம் அது உன் ஸ்மார்ட்போன் இல்லை…! 😉 உன் மதிப்புமிக்க பொக்கிஷம் உன் விசுவாசம்தான்.

பவுல், தனது வாழ்நாட்களின் முடிவில், தனது முழு வாழ்க்கையின் மிக முக்கியமான இலக்கை நிறைவேற்றியதாகக் கூறினார்; அதாவது, விசுவாசத்தைக் காத்துக்கொண்டதாகக் கூறினார் (2 தீமோத்தேயு 4:7). ஆம், மிகப்பெரிய அப்போஸ்தலனாகிய பவுல், ஒரு கிறிஸ்தவனாக தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் தான் மிக விலையுயர்ந்த பொக்கிஷமாகக் கருதிய தனது விசுவாசத்தைக் காத்துக்கொள்ள செலவிட்டதாகக் கூறுகிறார்.

அதே போல, இன்று என்ன நடந்தாலும் பரவாயில்லை, உன் விசுவாசத்தைக் காத்துக்கொள்!

  • இன்று நீ ஏமாற்றத்தை சந்திக்கக் கூடும்: விசுவாசத்தைக் காத்துக்கொள்.
  • உன் வாழ்விலும் சந்தேகம் இருக்கக் கூடும்: விசுவாசத்தைக் காத்துக்கொள்.
  • நீ பயப்படலாம்: ஆனாலும் விசுவாசத்தைக் காத்துக்கொள்.
  • உன் உணர்வுகள் எதை வெளிப்படுத்தினாலும் சரி : உன் மிகப்பெரிய பொக்கிஷமான விசுவாசத்தைக் காத்துக்கொள்.

வேதாகமம் கூறுகிறது: “அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப்போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.” (எபிரேயர் 6:19)

உலகத்தில் உண்டாகும் அனைத்து பேரழிவுகளையும் உன்னால் சகித்துக்கொள்ள முடியாத துன்பங்களையும் நீ எதிர்கொண்டாலும், உன் விசுவாசம் மட்டுமே மதிப்புக்குரிய ஒரே உண்மையான சாராம்சமும், நீ எல்லாவற்றையும் கடந்து மறுகரைக்குக் கொண்டுசெல்லக் கூடிய ஒரே நித்தியத்துக்கு ஏற்ற விஷயமுமாக இருக்கிறது.

அதைப் பொக்கிஷமாக வைத்துக்கொள், அதைப் பாதுகாத்துக்கொள், அதை வளர்த்துக்கொள். அதுவே பூமியில் உனக்கு உறுதியானதும் உடைக்க முடியாததுமான நங்கூரமாகும்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!