இது உனக்கான வாக்குத்தத்தம்: நீ அவரில் இளைப்பாறுவாய்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› இது உனக்கான வாக்குத்தத்தம்: நீ அவரில் இளைப்பாறுவாய்!

மத்தேயு 11:28-29 வசனங்களை அடிப்படையாகக்கொண்ட, இளைப்பாறுதலைக் கண்டறிவதற்கான ஆய்வை நாம் இன்று‌டன் நிறைவு செய்கிறோம். உனக்கான இந்தப் புதிய ஊக்கத்தை இன்றே பெற்றுக்கொள்.

இயேசு தம்முடைய வார்த்தையில் கூறுகிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” (மத்தேயு 11:28-29)

இது ஒரு வாக்குத்தத்தம்: நீ அவரில் இளைப்பாறுவாய். எந்த பாரங்கள் உன்னை நெருக்கினாலும் சரி, அது உனக்குள்ளே கொதித்துக்கொண்டிருக்கும் மனப்போராட்டங்களாய் இருந்தாலும் சரி, நம் பலவீனங்களைச் சுமக்கவே ஆண்டவர் மனிதனாக வந்தார். ஆண்டவராகிய இயேசுவே மனிதனாகப் பிறந்து வாழ்ந்ததால் தீர்க்கமுடியாத பிரச்சனையென்று எதுவும் மனிதனுக்கு இல்லை.

இளைப்பாறுதல் என்பது மூன்று பரிமாணங்களைக் கொண்டது. இது கண்டறியப்பட வேண்டும்:

உன்னில் இளைப்பாறுதல்: உன் கவலைகள் உன் மீதோ உன் விருப்பத் தேர்வுகள் மீதோ அல்லது உன் சுபாவங்கள் மீதோ அதிகாரம் செலுத்த முடியாது.

உன்னுடன் இளைப்பாறுதல்: நீ பூரணமான நபர் அல்ல, எனவே எல்லாவற்றையும் உன்னால் சுமக்க முடியாது: நீ ஒரு நேரத்தில் ஒரு அடி முன்னோக்கி எடுத்துவைக்கும்படி, ஆண்டவர் உன்னை ஆளுகை செய்து வழிநடத்துகிறார்.

உனக்காக இளைப்பாறுதல்: உன்னதத்திலிருந்து வரும் சமாதானத்தை நீ அறிந்தவுடன், இந்த சமாதானத்தின் மூலம் வரும் உறவுகள் மற்றும் சூழ்நிலைகளை நோக்கி நீ எளிதாகச் செல்லலாம்.

தெய்வீக இளைப்பாறுதலைப் பற்றி நாம் ஆராய்ந்து பார்த்த இந்த நாட்களில் நீ என்ன கற்றுக்கொண்டாய்? கடந்த நாட்களில் கர்த்தர் உனக்கு வெளிப்படுத்திய அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் எழுதி நினைவில் வைத்துக்கொள். சகலமும் ஆண்டவரது கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மறந்துவிடாதே!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “எரிக், உங்களின் தினசரி செய்தி ஊழியத்தால் நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, இருபது வருடங்களாக என் கணவரிடமிருந்து விலகி விவாகரத்து செய்து வாழ்ந்து வருகிறேன். நான் கைவிடப்பட்டதாகவும், ஏமாற்றப்பட்டதாகவும், நிராகரிக்கப்பட்டதாகவும் உணர்ந்ததால் விரக்தியில் வாழ்ந்து வந்தேன். ஆயினும்கூட, ஒவ்வொரு நாளும் கர்த்தர் தமது உண்மையினால், என்னைத் தம் அன்பான கரங்களை நீட்டி, என்னைத் தூக்கி எடுத்து, அவருடைய குணப்படுத்துதல் மற்றும் கிருபையினால் நாம் முழுமையாகக் காணக்கூடிய நம்பிக்கையளிக்கும் வார்த்தைகள் மற்றும் புதுபெலன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உங்களது வார்த்தைகள் மூலம் என்னை மெதுவாக மீட்டெடுக்கிறார். உங்களுக்காகவும் உங்கள் ஊழியத்திற்காகவும் நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். இது எனக்கும் பலருக்கும் உண்மையிலேயே ‘அனுதினமும் ஒரு அதிசயமாக’ இருக்கிறது.” (வினோபா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!