ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் தெரியுமா?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் தெரியுமா?

ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களை அளிக்கிறார் என்று நீ எப்போதாவது யோசித்ததுண்டா?

சொல் அகராதியின்படி, வாக்குத்தத்தம் என்பது “ஏதேனும் ஒன்று செய்யப்படும் அல்லது செய்யப்படாது என்று சொல்லப்படும் பிரகடனம்” மற்றும் “எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு வெளிப்படையான உத்தரவாதம்” ஆகும்.

மனிதனுக்கு வாக்குப்பண்ணுவது அவசியம் என்று ஆண்டவர் கண்டார்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் எப்போதும் நம்மை கவனத்தில் வைத்திருக்கிறார் என்பதை நமக்கு விளங்கப்பண்ணுகிறார்.

மனிதனுக்குத்தான் வாக்குத்தத்தம் தேவையே தவிர‌, ஆண்டவருக்கு அது தேவையில்லை! மனிதர்களாகிய நாம் ஆண்டவர் மீது வைக்கும் விசுவாசம் சரியானது, நியாயமானது, மற்றும் அவரிடத்தில் நமது எதிர்பார்ப்பு ஒருபோதும் ஏமாற்றமடையாது என்ற உறுதி எப்போதும் நமக்குத் தேவை.

நீ ஆண்டவரை விசுவாசிப்பது சரியானது, ஏனென்றால், “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” (எண்ணாகமம் 23:19)

ஆண்டவர் உன்னை மிகவும் நேசிக்கிறார் என்பதை உனக்குக் காட்ட விரும்புவதால், அவர் தமது வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார் என்று நான் நம்புகிறேன்‌.

நீ அவருடைய பார்வையில் விலையேறப்பெற்ற நபர், எனவே ஆண்டவர் உனக்கு உறுதியானதும் நிலைத்திருப்பதுமான வாக்குத்தத்தங்களை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்.

இந்த வாரம் உனக்கு ஒரு சிறந்த வாரமாக அமைய நான் உன்னை வாழ்த்துகிறேன்! இந்த வாரம் முழுவதும், ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் உனக்கானது என்பதை மறந்துவிடாதே.

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!