ஆண்டவர் உன்னை எவ்வளவு நேசிக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?
முகப்பு ›› அற்புதங்கள் ››
‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் மூலம் உன்னை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, உனக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடும்படிக்கு ஒவ்வொரு நாளும் உனக்கு உதவுவதில் நாங்கள் பெருமிதமடைகிறோம். (எபிரெயர் 12:2)
எங்கள் மின்னஞ்சல்களிலிருந்து நீ பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஜெபித்து எதிர்பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால், நீ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஆண்டவர் உன்னை நேசிக்கிறார் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
வேதாகமத்தில் நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒரு வசனம் உண்டு (யோவான் 3:16) இதை மனப்பாடம் செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”
இந்த வசனத்தை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம்:
“உலகத்தில்” என்ற வார்த்தை மனிதகுலம் முழுவதையும் குறிக்கிறது; அதில் நீயும் ஒரு நபர்!
“ஒரேபேறான குமாரனாகிய” இயேசு என்ற பதம், ஆண்டவருடைய குமாரனை மட்டுமல்ல, சிலுவையில் நம் பாவங்களுக்காக மரிக்க மனுவுருவெடுத்து பூமிக்கு வந்தவரான ஆண்டவரையே குறிக்கிறது. “ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது” – கொலோசெயர் 2:9.
யோவான் 3:16ம் வசனத்தை நமக்காக இவ்வாறு வாசிக்கலாம்; “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிற நீ, கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.”
இதைவிட மேலான, தியாகமான அன்பை உன்னால் கற்பனை செய்துபார்க்க முடியுமா? நீ அவருடன் என்றென்றும் அன்பான உறவில் வாழும்படிக்கு, இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் தம்மைத்தாமே தாழ்த்தி சிலுவையில் மரித்தார். அந்த அளவுக்கு அவர் உன்னை நேசிக்கிறார்!
ஆண்டவர் உன்னை நேசிக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதே, ஏனென்றால் அவர் உன்னை நேசிக்கிறார்!
இன்று ஆண்டவருடைய அன்பிற்காக நன்றி கூறுவோம், “பரலோகப் பிதாவே, எனக்காக உமது ஜீவனையே கொடுக்க பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னை மிகவும் நேசித்ததற்காக நான் நன்றி செலுத்துகிறேன். உம்மைப்போல் நேசிக்க எனக்குக் கற்றுத்தாரும், ஆமென்”