ஆண்டவர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்!
முகப்பு ›› அற்புதங்கள் ››
ஆதியாகமம் 1ம் அத்தியாயம் ஆண்டவரைப் பற்றிப் பேசுகிறது… அதாவது, பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரான ஆண்டவரைப் பற்றி நம்மோடு பேசுகிறது!
இன்றுவரை, விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் 10,000 கோடி விண்மீன் திரள்கள் கூட்டங்கள் இருப்பதாக மதிப்பிடுகின்றனர் – இது பூமியில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் 28 விண்மீன் திரள் கூட்டங்கள் இருப்பதற்குச் சமம்! மேலும் இந்த விண்மீன் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. உதாரணமாக, நமது விண்மீன் திரள்கள் கூட்டங்கள் அடங்கிய பால்வெளி மண்டலம் மட்டும் 10,000 கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது! இது ஒரு பெரிய எண் – இதைப் பற்றி நினைக்கும்போதே உங்களுக்கு தலை சுற்றுகிறது… அல்லவா!
அதே ஆண்டவர் நம் பூமியை மலைகள், ஏரிகள், ஆறுகள் ஆகியவற்றைக்கொண்டு நிரப்புவதற்குக் கவனமாய் இருந்தார்… இவையனைத்தையும் தம்முடைய வார்த்தையைக் கொண்டு மாத்திரமே அவர் உருவாக்கினார். மேலும், அவர் நம்மைப் படைத்து, நாம் அவருடைய படைப்பின் மேன்மையை அனுபவிக்கும்படி, ஐந்து அற்புதமான புலன்களை நமக்குக் கொடுத்தார். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நமது நாவின் சுவை அரும்புகள் புதுப்பிக்கப்படுகிறது என்பதும் ஒரு கோடி வெவ்வேறு வண்ணங்களை நம் கண்களால் உணர முடியும் என்பதும் உனக்குத் தெரியுமா?
ஆண்டவர், தம்முடைய தயாள குணத்தால், இவ்வளவு நுணுக்கமான விவரங்களுடன் நம்மைப் படைத்து, இந்த வியக்கத்தக்க திறன்களை நமக்கு அளித்திருப்பதால், நம் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொள்ளும் ஆண்டவருடைய திறனை நாம் ஏன் சந்தேகிக்க வேண்டும்?
ஆண்டவர் நமக்காக வைத்திருப்பவைகளும் அவரது ஐசுவரியமும் நம்மிடமிருந்து மில்லியன் கணக்கான தூரத்தில், மில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று நீ நினைக்கிறாயா?
தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல், தம்முடைய சொந்தச் சாயலில் படைத்தவர்களுக்காக அவரை அளித்தவர் உன்னை உன்னிப்பாக கவனிக்கமாட்டார் என்று நினைக்கிறாயா? (யோவான் 3:16)
ஆண்டவர் தரும் நன்மை உனக்குக் கிடைக்கிறது. ஏன்?
- ஏனென்றால் ஆண்டவர் உன்னை நேசிக்கிறார். (யோவான் 16:27)
- ஏனென்றால் அவர் உன்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறார், உன் பெயரைச் சொல்லி அழைக்கிறார். (ஏசாயா 45:3)
- ஏனென்றால், அவர் உன்னைக் கவனித்துக் கொள்ளவும், உன் தேவைகளை வழங்கவும் விரும்புகிறார்! (மத்தேயு 6:28-34)
கவலைப்பட வேண்டாம், சர்வவல்லமையுள்ள ஆண்டவராகிய இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் இங்கே இருக்கிறார், அவர் உன்னைத் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறார்!
