ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்!

வேதாகமத்தில் இயேசுவுக்கு இம்மானுவேல் என்ற ஒரு பெயரும் உள்ளது, இதற்க்கு “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அர்த்தம் (மத்தேயு 1:23) எவ்வளவு அருமையான பெயர்!

இந்த பெயர் அனைத்தையும் கூறுகிறது: ஆண்டவர் நம்முடன் இருக்கிறார், சந்தேகமின்றி!

  • எல்லாம் நன்றாக செல்லும் போது: ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.
  • விஷயங்கள் சிக்கலாகும்போது : ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.
  • நீ அன்பும் ஆதரவும் பெறுவதாக உணரும்போது : ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.
  • நீ தனியாக அல்லது தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும்போது: ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.
  • உன் வேதனையில் நீ கைவிடப்பட்டதாக உணரும்போது: உண்மையில் ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்.

எளிதானாலும், அவர் வேறுவிதமாக செய்ய மாட்டார்… அதுவே அவருடைய அடையாளம். அதுவே அவரை வரையறுக்கும் பண்பு. இனி உன்னோடு இருக்கக்கூடாது என்று அவர் நினைத்தாலும் கூட (இதுவும் சாத்தியமற்ற ஒன்று), அவரால் அது முடியாது ஏனென்றால் உன்னுடன் இருப்பதும், உன்னோடு கூட வருவதும் அவருடைய ஆழ்ந்த இயல்பு மற்றும் அவருடைய இயற்கைத் தன்மையாக இருக்கிறது.

இயேசு உன்னுடன் இருக்கிறார், ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு மணிநேரத்தின், ஒவ்வொரு நிமிடத்தின் ஒவ்வொரு நொடியும்!

இன்னொரு விஷயம், அவருடைய பிரசன்னமே இந்த நேரத்தில் உன்னுடைய பெரிதான ஆயுதமாக இருக்கிறது.

இன்று, நீ முற்றிலுமாக பாதுகாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறாய்… ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!