ஆண்டவர் உனக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருவார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவர் உனக்கு ஒரு புதிய இருதயத்தைத் தருவார்

எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். அவருடன் நான் பழகிய நாட்களில், ​நான் கற்றுக்கொண்ட சில பாடங்கள் இவை: உன் அதிசயத்திற்காக ஆண்டவரிடத்தில் தொடர்ந்து கேள். அதே நேரத்தில், விடாமுயற்சி மட்டுமே பொறுமையை வளர்க்கும் ஒரு அற்புதமான வழியாகும். ஆண்டவருடைய நேரம் எப்போதும் சரியானது மற்றும் வல்லமை வாய்ந்தது என்று நம்பு. நம்பிக்கையையும் உன் சுற்றத்தாரையும் கட்டியெழுப்புவதற்கான ஒரு வழியாக ஜெபத்தைப் பயன்படுத்து.

எசேக்கியேல் புஸ்தகத்திலிருந்து என்னைத் தாங்கி உயர்த்தும் ஒரு வாக்குத்தத்தத்தை நான் நினைவுகூருகிறேன்:

“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.” (எசேக்கியேல் 36:26)

எத்தனை அருமையான ஒரு வாக்குத்தத்தம் இது! என் இருதயம் கடினமாகவும் சோர்வாகவும் இருக்கும்போது,​ என்னால் ஆண்டவரிடத்தில் புதிய இருதயத்தைக் கேட்க முடியும்! அவரால் மட்டுமே சகலத்தையும் புதிதாக்க முடியும்!

இன்று ஒரு நல்ல செய்தி வேண்டுமா? நம் ஆண்டவர் தம்முடைய இருதயத்தை நமக்காக தானம் செய்தவராவார்! நாம் ஒரு புதிய இருதயத்தைக் கேட்கும்போது, அவர் தமது இருதயத்தை நமக்கு வழங்குகிறார்! நித்திய ஜீவன், இரட்சிப்பு மற்றும் ஆண்டவருடைய சொந்த இருதயத்திற்கு ஏற்ற ஒரு இருதயத்தை நாம் பெற்றுக்கொள்ளும்படி, இயேசு தம்முடைய ஜீவனையே கொடுத்தார்! நீ ஆண்டவருடைய இருதயத்தைக் கொண்டிருப்பாயானால், நீ வித்தியாசமாக வாழ்வாய், நீ வித்தியாசமாக நேசிப்பாய், நீ வித்தியாசமாக மன்னிப்பாய், மற்றும் நாளைய தினத்தை வேறு விதமாக எதிர்கொள்வாய்.

சற்று நேரம் ஒதுக்கி, ஒரு புதிய இருதயத்தைத் தருவேன் என்று வாக்குப்பண்ணிய ஆண்டவருக்கு நன்றி சொல். உன் இருதயம் களைப்பாகவோ அல்லது சோர்வாகவோ இருந்தாலும், புத்தம் புதிய இருதயத்தைப் பெறுவதைப் பற்றிய அவருடைய வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்!

நன்மை செய்வதில் சோர்வடைய வேண்டாம். ஏன்? அந்த ஊக்குவிப்புடன் ஒரு வாக்குத்தத்தமும் இணைக்கப்பட்டுள்ளது.

“நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.” (கலாத்தியர் 6:9)

ஆண்டவருடைய நோக்கத்தை நம் முழு இருதயத்தோடு நிறைவேற்றினால், நாம் அற்புதமான அறுவடையைக் காண்போம்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!