ஆண்டவருடைய நோக்கத்தை தேர்ந்தெடு!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவருடைய நோக்கத்தை தேர்ந்தெடு!

நிக் வுஜிசிக் என்பவரைப் பற்றி உனக்குத் தெரியுமா? (அவரைப் பற்றிய வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்) https://www.youtube.com/watch?v=zOzsjEmjjHs

நிக் என்பவர் விசேஷமான ஒரு நபர், ஆனால் அவரது வாழ்க்கை ஒருபோதும் சுலபமானதாக இருந்ததில்லை. அவர் கை கால்கள் இல்லாதவராய் பிறந்து, தன் இளமைப் பருவத்திலேயே,​ தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்பிய அளவிற்கு, தனது வாழ்நாளில் பல துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்திருந்தார்.

ஆனால் ஏதோ ஒரு விஷயம் நிக் அவர்களைக் காப்பாற்றி, அவர் இன்றும் சந்தோஷமாக அனுபவிக்கும் திருப்திகரமான வாழ்க்கையை வாழ அவருக்கு உதவியது… ஒரு நாள் அவர், ஆண்டவருடைய கண்ணோட்டத்தில் தனது சூழ்நிலைகளைப் பார்க்க முடிவு செய்தார்!

நிக் தனக்கு முன்னால் இருந்த தனது தோல்வியுற்ற வாழ்வோ, தாங்க முடியாத பாரமோ, சரீரத்தில் உள்ள பயங்கரமான ஊனமோ தன்னைத் தடுத்து நிறுத்துவதை அனுமதிக்கவில்லை.

நிச்சயமாக அனுமதிக்கவில்லை, அவர் சூழ்நிலையை ஆண்டவர் பார்க்கிறபடி பார்க்க முடிவு செய்தார்!

நிக் அவர்களுக்கு ரோமர் 8:28 மிகவும் பிடித்த வசனம்.

“அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.”

அவர் கூறியது போல், “உண்மையிலேயே அந்த வசனம் என் மனதிற்குள் பேசியது. அதிர்ஷ்டம், வாய்ப்பு அல்லது தற்செயலாக நடப்பது என்று எதுவும் இல்லை என்றும், கிறிஸ்துவைப் போல நம்மை மாற்றுவதற்காகவே இந்த ‘மோசமான’ விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கின்றன என்றும் நான் உறுதியாக நம்பும் அளவிற்கு அது எனக்கு உறுதியளித்தது. ஆண்டவர் ஒரு நல்ல நோக்கத்தை வைத்திருந்தாலொழிய, நம் வாழ்வில் எதையும் நடக்க விடமாட்டார் என்பதை அறிந்ததும் எனக்குள் அளவுகடந்த சமாதானம் பாய்ந்து சென்றதை நான் உணர்ந்தேன்” என்று கூறினார்.

இந்த சமாதானத்தை உன்னாலும் உணர முடியும், சகலமும் தேவனுடைய கரத்தில் உள்ளது என்பதை அறிந்துகொள். உன் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை, அவர் சகலத்தையும் உன் நன்மைக்காக நடைபெற வைக்கிறார்!

ஆசீர்வாதமாய் இரு நண்பனே/தோழியே. நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் மற்றும் பாராட்டுகிறேன், எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவர் உன்னை மனதாரவும் ஈடு இணையற்ற வகையிலும் நேசிக்கிறார்!

சாட்சி: “உங்களது மின்னஞ்சல்கள் எனது காலை நேரத்தின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. உங்கள் செய்திகள் எனது எண்ணங்களை ஆண்டவருடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கின்றன. நீங்கள் பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டவர். இப்போது கவலை கடந்தகாலத்தில் இருந்த ஒரு விஷயமாகிவிட்டது. மிக்க நன்றி.” (ரோஸ்லின்)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!