ஆண்டவருடைய தூதர்கள் உன்னோடு கூட இருக்கிறார்கள்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவருடைய தூதர்கள் உன்னோடு கூட இருக்கிறார்கள்!

நீ ஒருபோதும் தனியாக இருப்பதில்லை என்பது உனக்குத் தெரியுமா? ஆண்டவர் உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் உன் மூலம் ஊழியப்பணியை நிறைவேற்ற விரும்புகிறார். இந்த நோக்கத்திற்காக, அவர் உன் அருகில் உதவியாளர்களை நியமிக்கிறார்.

ஆம், தேவதூதர்கள் தேவனுக்குப் பணிவிடை செய்கிறார்கள் என்று வேதாகமம் சொல்கிறது… உனக்கு உதவ அவர்தாமே அவர்களை அனுப்புகிறார். இதை நாம் எபிரெயர் 1:14-ல் வாசிக்கிறோம்: “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் (தேவதூதர்கள்) அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?”

சத்துரு உன்னைத் தாக்கும்போது, உன்னை எவ்வாறு பாதுகாப்பது என்பது ஆண்டவருடைய தூதர்களுக்குத் தெரியும்! பேதுரு சிறையில் அடைக்கப்பட்டபோதும் இதுதான் நடந்தது… அவன் இரண்டு காவலர்களுக்கு நடுவில் தூங்கிக்கொண்டிருக்கையில், கிட்டத்தட்ட 16 காவலர்கள் அவனது அறையின் கதவைக் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, ​​தேவதூதன் தோன்றி, பேதுருவை சிறைச்சாலையிலிருந்து விடுவித்து, வீரர்கள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகும் அளவிற்கு அவரைப் பத்திரமாக வெளியே அழைத்துச் சென்றனர் என்று வேதாகமம் சொல்கிறது! (அப்போஸ்தலர் 12:4-11)

இங்கே பார்… நீ எதற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை! நீ தனியாக இருப்பதாக உணர்ந்தால், ஆண்டவர் உன்னைத் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள். உன் எதிராளிகள் உன்னைத் தாக்க வந்தால், உனக்கு உதவி செய்யும்படி தேவதூதர்கள் உன்னிடத்துக்கு விரைந்து வருவார்கள்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!