ஆண்டவரிடத்தில் உன் எதிர்காலத்துக்கான நம்பிக்கை உள்ளது!
முகப்பு ›› அற்புதங்கள் ››
எரேமியா 29:11ம் வசனத்திலிருந்து வேத பாடத்தை நாம் தொடர்கிறோம்; நம்பிக்கையைப் பற்றி இன்று நாம் தொடர்ந்து தியானிப்போம்!
வேதாகமம் கூறுகிறது, “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (எரேமியா 29:11)
நம்பிக்கை… அது நம் வாழ்வில் மிகவும் விலையேறப்பெற்றது. ஆண்டவர் அதை நமக்குள் வைக்கும்போது, நம்மால் அதை அவருடைய சமூகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இன்று, நம்பிக்கையைத் தரும் ஒரு ஜெபத்தை ஆண்டவரிடத்தில் ஏறெடுக்க உன்னை அழைக்கிறேன்.
நாம் சேர்ந்து ஜெபிப்போம்:
“ஆண்டவரே, உமக்கு நன்றி, என் எதிர்காலத்திற்கான நம்பிக்கை உமக்குள் இருக்கிறது.
உமது நோக்கங்களை நான் நம்புவதால் உம்மிடம் வருகிறேன்.
நீர் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல;
நீர் என் எதிர்பார்ப்புகளுடன் விளையாட ஒரு மனிதர் அல்லவே,
இறுதியில் என்னை நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்.
நீர் உண்மையுள்ள ஆண்டவர் என்பதால் உம்மை நம்புகிறேன்.
உம் வார்த்தையினால் சொன்னதை உம் கரத்தினால் நீர் நிறைவேற்றுகிறீர்.
நீர் என் இதயத்தை அறிவீர், நான் அதை அறிவேன், ஏனென்றால் உம்மைப் பின்பற்றுவதே என் விருப்பம்,
என்னை எப்படிப் பாதுகாப்பான புகலிடத்திற்கு அழைத்துச் செல்வது என்பது உமக்குத் தெரியும்.
என்ன நடந்தாலும், நான் தொடர்ந்து முன்னேறுவேன்!
உம்முடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. எல்லையற்ற என் நம்பிக்கை நீரே!
நீர் ஒருவரே என் நம்பிக்கை என்று இன்று நான் அறிக்கையிடுறேன்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
(எண்ணாகமம் 23:19-20, 2 நாளாகமம் 6:15, புலம்பல் 3:22-23)
இந்த நாள் உனக்கு ஒரு சிறப்பான நாளாக அமைவதாக!