ஆண்டவரால் உனக்கு ஒரு வேலையைத் தர முடியும்!

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆண்டவரால் உனக்கு ஒரு வேலையைத் தர முடியும்!

இன்று, தனது பணியில் ஒரு அதிசயத்தைப் பெற்றுக்கொண்ட ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சல் வாசகர் ஒருவரது சாட்சியை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்!

“எனக்கு வேலை இல்லாததால், உங்கள் மீதும் உங்கள் ஜெபக் குழு மீதும் நம்பிக்கை வைத்தேன். நான் பட்ட துயரம் அனைத்தும் ஆண்டவருக்கு மட்டுமே தெரியும். அதிக கவலையினால் நான் நோய்வாய்ப்பட்டேன்… நான் சரீரப் பிரகாரமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பாதிக்கப்பட்டேன். ‘உன் மலையைப் பார்த்து பெயர்ந்துபோகும்படி சொல்லு!’ என்ற உங்களின் செய்தி எனக்கு மீண்டும் தைரியத்தை அளித்தது. நான் இதை ஒப்புக்கொண்டேன்… நான் வீழ்ந்துபோக விரும்பவில்லை. இன்று மீண்டும் ஒரு புன்னகை என்னில் மலர்கிறது. இப்போது சுவாரஸ்யமான ஒரு புதிய வேலை எனக்குக் கிடைத்துள்ளது, மேலும் அது வசதிக்கேற்ப அமைத்துக்கொள்ளத்தக்கதான வேலை, ஆண்டவரோடு நான் செய்துகொண்ட உறுதிமொழியை நிறைவேற்றவும் அந்தப் பணி எனக்கு உதவுகிறது. உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி கூறிக்கொள்கிறேன். நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.”

வேலை தேடுவது என்பது பாலைவனத்தைக் கடப்பது போன்றது. மேலும் இந்த சோதனை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஆண்டவருக்கு மட்டுமே தெரியும். வேலையின்மை பிரச்சனையை அனுபவிப்பது என்பது உண்மையிலேயே மிகவும் கடினம். நீ இப்போது வேலை தேடிக்கொண்டிருப்பாயானால், நான் உன்னை ஊக்குவிக்கிறேன்…

  • உன் மகிழ்ச்சியைக் காத்துக்கொள், ஏனென்றால் அது கர்த்தரிடமிருந்து வருகிறது! உன் சமாதானம் திருடப்பட வேண்டாம், வேதாகமம் நமக்குக் கூறுவதுபோல், உன் கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்துவிடு. (1 பேதுரு 5:7)
  • உன் மதிப்பானது உனது பட்டத்திலோ அல்லது வேலைக்கான பொறுப்பிலோ இல்லை, ஆண்டவருக்கு முன் நீ யார் என்பதில் மாத்திரம் கவனம் செலுத்து! “அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” என்று வேதாகமம் கூறுகிறது. (2 கொரிந்தியர் 6:18)
  • நீ சோர்வடையாதே! ஆண்டவர் உன் தேவைகளைச் சந்திக்கிற ஆண்டவராய் இருக்கிறார். ஆண்டவரின் வார்த்தை கூறுகிறது: “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” (பிலிப்பியர் 4:19)

ஆண்டவர் சரியான நேரத்தில் உனக்குத் தேவையானதைக் கொடுப்பார். ஏனென்றால் அவர் சர்வவல்லமையுள்ளவர். அவருடைய சமாதானம் உனக்குள் வந்து உன்னை நிரப்புவதாக! நீ சரியான இடத்தில்தான் இருக்கிறாய் என்றும், நீ செயலாற்ற வேண்டிய ஒரு பங்கு இருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். ஜீவனுள்ள ஆண்டவரை ஆராதிக்கும் நபராகவும் அவருடைய ராஜ்யத்தின் ஸ்தானாதிபதியாகவும் இருக்க வேண்டும் என்பதே உனக்கான முதல் அழைப்பு!

நான் உனக்காக இப்போது ஜெபிக்க விரும்புகிறேன்… “ஆண்டவரே, இதை இப்போது வாசித்துக்கொண்டிருக்கும் என் சகோதரனை / என் சகோதரியைப் பாரும். நீர் பரலோகத்தின் அனுகூலமான வாசல்களைத் திறக்கும்படி நான் ஜெபிக்கிறேன்! ஆண்டவரே, உமது பிள்ளையாக இருக்கிற இவர் உமது சுபாவத்தையும் அன்பையும் மற்றவர்களுக்கு மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் தொழில் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பீராக. உமது பிள்ளையாகிய இவர் எல்லா இடங்களிலும் பரலோகத்தின் சூழலைப் பரப்பும்படி நீர் பயன்படுத்துவீராக. இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

வேலை தேடும் ஒரு நபர் யாராவது இருந்தால், இந்தச் செய்தியை அந்த நபருடன் பகிர்ந்துகொள். அது நிச்சயம் அவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “ஆண்டவர் பெரியவர் என்று எனக்குத் தெரியும்! என்னுடைய வேலை சீக்கிரத்தில் முடிவடைய இருந்தது, மற்றும் எனக்கு வேறு வேலை அதுவரை கிடைக்கவில்லை, அதனால் நான் மனதளவில் சோர்ந்துபோயிருந்தேன்… அவர் எனக்குக் கொடுக்க இருந்த வேலைக்காக நான் ஜெபித்து, நன்றி சொல்ல ஆரம்பித்தேன். வேலையிலிருந்து விடுபட எனக்கு சில வாரங்கள் மட்டுமே இருந்தன. அந்த மாத இறுதிக்குள் ஒரு வேலை கிடைத்து; அதைச் செய்வதாக ஆண்டவரது நாமத்தில் அறிக்கையிட்டேன். சில நாட்களுக்குப் பிறகு நான் என் சகோதரர் வேலை செய்யும் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கச் சென்றேன். அதே நாளில் வேலைக்குச் சேர்ந்தேன். நான் அங்கிருந்து புறப்பட்டபோது, ஆண்டவர் என்மீது வைத்திருந்த அன்பை நினைத்து என் உடல் சிலிர்த்தது, என் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை என்னால் அடக்க முடியவில்லை. இதைத்தான் நான் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” (மகிமா)

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!