ஆசீர்வாதம் எங்கே இருக்கிறது?

முகப்பு ›› அற்புதங்கள் ›› ஆசீர்வாதம் எங்கே இருக்கிறது?

மக்கள் உனக்குத் தீங்கிழைக்கும் செயல்களைச் செய்யும்போது, நீ எப்படி நடந்துகொள்கிறாய்? அவர்கள் வெறுக்கத்தக்க வகையில் தவறு செய்யும்போது அல்லது உன்னைக் காயப்படுத்தும்போது, ​​உனக்குள் எப்படிப்பட்ட உணர்வுகள் எழுகின்றன?

இதுபோன்ற சூழ்நிலைகளில், கோபத்துடனும், கசப்புடனும், பழிவாங்கும் எண்ணத்துடனும் இருப்பது என்பது நிச்சயமாக இயல்பானதுதான். ஆனால் இந்தச் சுழலும் உன் கோப உணர்வுகளும் தொடர்ந்து நீடிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை வேதாகமம் நமக்குக் காட்டுகிறது. இது நமக்கு ஒரு வித்தியாசமான பாதையை, அதாவது மிகப் பெரிய நம்பிக்கையின் பாதையைத் காட்டுகிறது.

“நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.” (எபேசியர் 4:26-27)

“தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்” என்றும் வேதம் நமக்குப் போதிக்கிறது (1 பேதுரு 3:9)

ஆசீர்வதிக்கப்பட்ட சமாதான வாழ்க்கைக்கான இரகசியம் இங்கேதான் இருக்கிறது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பே உன் கோபம் தணியக்கடவது, மற்றவர்கள் உன்னைக் காயப்படுத்தும்போது அவர்களை ஆசீர்வதிக்க நீ மறவாதே.

அது அவ்வளவு எளிதல்ல என்பது எனக்கும் தெரியும், ஆண்டவருக்கும் தெரியும், ஆனாலும், நமக்கு எது சிறந்தது என்பதை அவர் அறிவார்.

இங்குதான் இந்த ஆசீர்வாதத்தைப் பெற முடியும். ஆண்டவர் உனக்கு அருகிலேயே இருக்கிறார், அவருடைய ஆவியானவர் சரியானதைச் செய்ய உனக்கு பலத்தைத் தருவார். நான் அதை விசுவாசிக்கிறேன். நான் உனக்காக ஜெபிக்கிறேன்!

இன்றே நீ கோபத்தை வெல்ல முயற்சி செய்வாயாக!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!