அமைதி நம் செவிகளை அடைத்துவிடுமா?🤔
முகப்பு ›› அற்புதங்கள் ››
நீங்கள் எப்போதாவது உண்மையான அமைதியை அனுபவித்திருக்கிறீர்களா? ஒரு சத்தமும் இல்லாத ஒரு தருணத்தை அனுபவித்திருக்கிறீர்களா?
நான் மும்பையில் வாழ்ந்துகொண்டிருந்தபோது, அங்கு ஒரு வினாடி கூட சத்தம் கேட்காமல் இருந்ததில்லை. எப்பொழுதும் ஒரு மின்விசிறி சுழன்றுகொண்டிருக்கும் சத்தம், ஏசி சத்தம், தூரத்தில் கார்கள் ஒலியெழுப்பும் சத்தம், தெரு நாய்கள் குரைக்கும் சத்தம் – இந்தப் பட்டியலில் நீங்கள் கேட்கும் சத்தத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் – இவ்வாறு தொடர்ந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சிறிய நகரங்கள் அல்லது எனது சொந்த நாடு போன்ற அமைதியான இடங்களுக்கு நான் செல்லும்போது, சத்தம் இல்லாதது, என் காதுகளில் ரிங்காரமிட்டதுபோல் இருந்தது. அந்த அமைதியை 👂🏼 என்னால் கேட்க முடிந்தது.
இது விசித்திரமானது, இல்லையா? 🤪
நமது ஆவிக்குரிய காதுகளிலும் ரிங்கார சத்தத்தைக் கேட்க முடியும். நாம் சத்தத்திற்கு மிகவும் அடிமையாகிவிட்டோம், அதைக் கேட்க ஏங்குகிறோம், தொடர்ந்து நம் மனதை ஆக்கிரமிக்கும் விஷயங்களைத் தேடுகிறோம் – இடைவிடாது சமூக ஊடகங்களில் மூழ்கி, மொபைல் திரையை மேல்நோக்கித் தள்ளுகிறோம், மனச்சோர்வைத் தவிர்க்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தல் அல்லது தனியாக இருப்பதைத் தவிர்ப்பதற்காக எப்போதும் நம்மைச் சுற்றியுள்ள நபர்களுடன் நேரம் செலவிடுதல் என சத்தங்கள் இன்றி நாம் வாழ்வதில்லை.
தனிமையையும் மௌனத்தையும் கடைப்பிடிக்கத் தொடங்குவது உங்கள் ஆத்துமாவில் ஒரு ரிங்கார ஒலி போன்ற அசௌகரியத்தை உணரச் செய்யலாம். நீங்கள் அமைதியாக இருக்கும்போது, உங்கள் எண்ணங்களின் சத்தங்கள் அதிகரிக்கின்றன, ஏனென்றால் அவை உங்களைச் சுற்றியுள்ள சத்தத்தால் அமைதியாகிவிடாது. இது சற்று பயமுறுத்துவதாகவும் இருக்கலாம்; மேலோட்டமான சத்தத்தைத் தவிர்க்கவும் உங்களை அமைதிப்படுத்தவும் நீங்கள் மிகவும் கடினமாக உழைத்த அந்த உணர்வுகள் உங்களை மூழ்கடிக்க முடியுமா?
“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்” (சங்கீதம் 46:10)
தனிமை மற்றும் மௌனத்தைக் கடைபிடிப்பது என்பது விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு செயல். அமர்ந்திருங்கள்; ‘அறிந்துகொள்ளுதல்’ வரும் என்று விசுவாசியுங்கள். ஆண்டவருக்கு முன்பாகக் காத்திருக்க ஆயத்தமாக இருங்கள்; காரியங்களின் விளைவைக் கட்டுப்படுத்த உங்களால் எதுவும் செய்ய முடியாது, ஆண்டவருடைய பதிலைக் கட்டாயப்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயல்கள் என்று எதுவும் இல்லை, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களை ஜீவ பலியாக ஒப்புக்கொடுப்பது மட்டுமே. (ரோமர் 12:1)
“உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.” (1 தெசலோனிக்கேயர் 5:24)
நாம் தொடர்ந்து பயிற்சி செய்வோம்:
- ஒரு அமைதியான சூழலில், சற்று ஜாக்கிரதையாக உட்காரவும். உதாரணமாக, உள்ளங்கைகளை திறந்து வைத்துக்கொண்டு உட்காரவும், படுத்து தூங்கிவிட வேண்டாம்.
- கவனத்தை சிதறடிக்கும் காரியங்களை அகற்றவும். உங்கள் தொலைபேசியை அணைக்கவும் மற்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை நிறுத்தவும்.
- ஒரு சாதாரண இலக்கை வைத்துக்கொள்ளவும் – நீங்கள் நினைப்பதை விட இது சற்று கடினமானதுதான்! தொடங்குவதற்கு முன் 10 முதல் 15 நிமிடங்கள் வரை கடிகாரத்தில் டைமரை வைத்துக்கொள்ளவும்.
- உங்களுக்கு ஒரு எளிய ஜெப வாக்கியத்தைக் கொடுக்கும்படி ஆண்டவரிடத்தில் கேளுங்கள், உதாரணமாக, “இதோ நான் வந்திருக்கிறேன்” என்று சொல்லுங்கள். உங்கள் மனம் அலைபாயும்போது, ஆண்டவர் மீது கவனம் செலுத்த அந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்லவும்.
- கர்த்தருடைய ஜெபத்துடன் இதை நிறைவு செய்யவும், (மத்தேயு 6:9-13) மற்றும் நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் அல்லது எவ்வளவு அனுபவித்தீர்கள் என்பதை வைத்து உங்கள் நேரத்தை மதிப்பிடுவதை தவிர்க்கவும்.
