அதிசயத்தின் நேரம் நெருங்கிவிட்டது!

முகப்பு ›› அற்புதங்கள் ›› அதிசயத்தின் நேரம் நெருங்கிவிட்டது!

ஆர்க்கிட் மலரானது மலர்களிலெல்லாம் மிகவும் அழகானதும் மிருவானதுமாய் இருக்கிறது. பச்சை நிறமான, வெற்று தண்டு மட்டுமே எஞ்சியிருக்கும் வரை, அதன் வாழ்நாளில், ஆர்க்கிட் மலரின் அனைத்து இதழ்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடுமாம். ஆர்க்கிட் மலர் அதன் அழகையும் வனப்பையும் கொண்ட சாராம்சத்தை என்றென்றைக்குமாய் இழந்துவிட்டதாகத் தோன்றும். இருப்பினும், சரியான இடத்தில் தண்டுப் பகுதியில் சிறிது வெட்டப்பட்டால், கொஞ்ச நாட்கள் கழித்து, பூக்கள் மீண்டும் பூக்க ஆரம்பிக்கும்.

இன்று ஒரு பேரழிவாக தோன்றுவது உனக்கு ஒரு அதிசயமாக மாற ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறது! பூக்கள் இல்லாத ஒரு ஆர்க்கிட் செடியானது இன்னும் பூக்கும் திறனைத் தக்கவைத்துக் கொள்வதுபோல, தேவனுடைய கரங்களில் உனக்குள் இருக்கும் அசாதாரணமான ஆற்றல் என்றென்றும் நிலைத்திருக்கும். எந்தெந்த இடங்களை “கிளை நறுக்க வேண்டும்” மற்றும் “வெட்ட வேண்டும்” என்பது உன்னை சிருஷ்த்தவருக்கு நன்றாகத் தெரியும். அதனால் நீ வளர்ந்து முதிர்ச்சியடையும்படிக்கும், கனிதரும்படிக்கும், ஆசீர்வாதத்தின் சிறந்த ஆதாரமாக மாறும்படிக்கும் எப்படி செய்யவேண்டுமென்று தெய்வீகத் தோட்டக்காரருக்குத் தெரியும்!

நீ ஆண்டவரை விசுவாசிப்பதால், ஒவ்வொரு நாளும் கிருபையில் நடந்து வெற்றியின் வாழ்க்கையை வாழ உன்னை அழைக்கிறார்! நீ அவருடையதாக இருப்பதால், ஆண்டவர் உன்னை ஒவ்வொரு நாளும் அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார். இன்று நீ எதை எதிர்கொண்டாலும் சரி, அது நாளைய தினத்தை நோக்கி உன்னை அழைத்துச் செல்லும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, அதிசயத்தை வெளிப்படுத்தும் ஒரு பரிமாணத்திற்கு நேராக, உன்னை அடுத்த ஒரு பரிமாணத்திற்குள் கொண்டுவர கர்த்தர் பயன்படுத்தும் ஒரு கருவிதான் இது!

அதிசயத்தின் நேரம் நெருங்கிவிட்டது!

Signature_EricCelerier

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்* சந்தா பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!