நீ பின்பற்ற வேண்டிய வழியை ஆண்டவர் உனக்குக் காண்பிக்கப் போகிறார்

முகப்பு ›› அற்புதங்கள் ›› நீ பின்பற்ற வேண்டிய வழியை ஆண்டவர் உனக்குக் காண்பிக்கப் போகிறார்

“கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.” (வேதாகமம், சங்கீதம் 27:11)

ஒரு நல்ல தந்தையைப் போல, உனக்குக் கற்பிக்க வேண்டும் என்பதுதான் ஆண்டவரின் சித்தம்! நீ பின்பற்ற வேண்டிய பாதையை அவர் உனக்குக் காட்ட விரும்புகிறார். இன்று அவரிடம், “தேவனே! உமது வழியை எனக்குக் கற்றுக்கொடுப்பீராக” என்று ஜெபி.

  • அவருடைய வழிகள் எப்போதுமே நம் வழிகளாய் இருப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 55:8ஐப் பார்க்கவும்)

அவர் ஞானமுள்ளவர் மற்றும் எதிர்காலத்தை நிச்சயமாக அறிந்தவர். ஒரு நாள், நான் என் வாழ்க்கையை தொழில் ரீதியாகவும் இடம் ரீதியாகவும் மாற்றியமைக்க திட்டமிட்டுக்கொண்டிருந்தேன், அப்போது ஆண்டவர் என்னிடம், “எரிக், இது என் வழி அல்ல” என்று சொன்னார். அதிர்ஷ்டவசமாக, நான் அவர் சொன்னதைக் கேட்டேன், ஏனென்றால், அந்த ஸ்தாபனத்தின் நிறுவனர்கள் விரைவில் திவாலாகிவிட்டனர்… தேவன் தேவனாக இருப்பதால், அவருடைய வழியை உனக்குக் கற்பிக்க அவரிடம் கேட்பது முக்கியம்!

  • அவருடைய வழி உத்தமமானது. அவருடைய பாதையில், அவர் உன்னுடன் நடப்பதால் நீ பாதுகாப்பாக இருக்கிறாய். அவரது பாதையில், நீ முன்னும் பின்னும் பாதுகாக்கப்படுகிறாய், மேலும் ஆண்டவர் உன் மீது தம் கரத்தை வைத்திருக்கிறார். (வேதாகமம், சங்கீதம் 139:5 பார்க்கவும்)

நீ அவருடைய பாதையில் இருக்கிறாய்!

  • நிச்சயமாக வழியில் தடைகளும், குற்றம் சாட்டுபவர்களும் கூட இருக்கலாம் (நாம் அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக நாளை பேசுவோம்). “நாய்கள் குரைக்கும், ஆனால் வண்டி எப்படியும் கடந்து செல்கிறது” என்று ஒரு அரபு பழமொழி சொல்வது போல் இருக்க வேண்டும். அதாவது அவதூறு செய்பவர்கள் சொல்வதைப் பற்றிக் கவலைப்படாமல் உன் வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதே இதன் பொருள்.

அவருடைய வழியைப் பின்பற்று. இயேசு உன்னை வழிநடத்துகிறார்! தொடர்ந்து முன்னேறிச் செல். போக வேண்டிய பாதையை ஆண்டவர் உனக்குக் காட்டுவார்!

"அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்கத்தை பெற இங்கே இலவசமாக சந்தா பதிவு செய்யலாம்



* பதிவு செய்வதன் மூலம், நீங்கள் Jesus.netன் விதிமுறைகள் & நிபந்தனைகள் மற்றும் தனியுரிமை அறிக்கையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

You are a miracle!